அதிமுக குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல உள்ளது- டிடிவி தினகரன்

 
TTV DHINAKARAN TTV DHINAKARAN

அதிமுகவில் நடக்கும் பிரச்சனைகளை மக்கள் கவனத்திலிருந்து திசை திருப்பவே அதிமுக  போராட்டங்களை அறிவித்துள்ளார்கள் என அமமுக பொதுச்செயலாளார் டி.டி.வி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

AMMK general secretary TTV Dhinakaran files his nomination from Kovilpatti  | Business Standard News

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அ.தி.மு.க வில் நடப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.அ.தி.மு.க குரங்கு கையில் கிடைத்த பூ மாலை போல் உள்ளது. எனக்கும் சசிகலாவிற்கும் மன வருத்தம் உள்ளது என கூறும் அரசியல் விமர்சகர்களின் தரம் என்ன என்பது நமக்கு தெரியும். சந்தர்ப்பவாதத்தையும், நம்பிக்கை துரோகத்தையும் ராஜ தந்திரம் என கூறிய அவர்களின் கருத்துக்கு பதில் கூற முடியாது. நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் நாங்கள் போட்டியிடுவோம். மக்கள் எங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

நீட் தேர்வு விவகாரம், ஏழு தமிழர் விடுதலை போன்றவற்றில் ஆட்சி அமைவதற்கு முன்பாக தி.மு.க என்ன பேசினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதும் தெரியும். கொஞ்சம் கொஞ்சமாக தி.மு.க வின் சுயரூபம் வெளியே தெரிகிறது. அ.தி.மு.க விற்குள் நடைபெறும் உட்கட்சி பிரச்சனைகளை அவர்களால் தீர்க்க முடியவில்லை. அந்த பிரச்சனைகளிலிருந்து மக்களை திசை திருப்பவே பல்வேறு போராட்டங்களை அறிவிக்கிறார்கள். ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்ஸை யார் இயக்குகிறார்கள் என்பதை காலம் விளக்கும்.

சசிகலா தன்னை அ.தி.மு.க பொதுச்செயலாளர் என நீதிமன்றத்தில் கூறுகிறார். அவரை அ.தி.மு.க வில் இணைக்க மாட்டோம் என ஓபிஎஸ், ஈபிஎஸ் சொல்கிறார். அது அவர்களின் பிரச்சினை அது தொடர்பாக அ.ம.மு.க கருத்து கூறாது. அ.தி.மு.க வை மீட்டு நல்லாட்சி தருவதே எங்கள் இலக்கு. அதை நோக்கியே நாங்கள் சென்று கொண்டுள்ளோம். வெற்றி, தோல்வியை கண்டு அஞ்சும் தொண்டர்கள் எங்கள் இயக்கத்தில் இல்லை” எனக் கூறினார்.