அதிமுக மீண்டும் ஒன்றிணைய வாய்ப்பு இல்லை- டிடிவி தினகரன்

 
  டிடிவி தினகரன்

அதிமுக மீண்டும் ஒன்றிணைய வாய்ப்புகள் இல்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

 “அதிமுக 5,000 முதல் 10,000 வாக்குகள் தான் வாங்கும்”-  டிடிவி தினகரன் பேட்டி

கோவையில் நடைபெறும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று விமான மூலம் கோவை வந்தார். கோவை பந்தயசாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கோவை ஒருங்கிணைந்த மாவட்ட செயல் வீரர் கூட்டத்தில் பங்கேற்க வந்திருப்பதாக தெரிவித்தார். அவரிடம் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு அமமுக அழிந்து விடும் என்ற சொல்லி இருப்பது குறித்த கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன்,வினாசகாலே விபரீதபுத்தி என்பார்கள், அழிய போகின்றவர்கள் அடுத்தவர்களை பார்த்து அப்படி பேசுவார்கள் எனவும், துரியோதன கூட்டம் எப்போதும் ஜெயித்தது கிடையாது, அவர்கள் வீழ்வது உறுதி என்றும் தெரிவித்தார். 

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பிரிந்த அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைக்க படுவார்கள் என சசிகலா கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, அதிமுக மீண்டும் ஓன்றிணைய வாய்ப்புகள் இல்லை என தெரிவித்தார். அதிமுக ஒன்றிணையும் என சசிகலா சொல்லி இருப்பதால் அவரிடம்தான் இதை கேட்க வேண்டும் என தெரிவித்த அவர், எந்த காரணத்தை கொண்டும் பழனிசாமி்யுடன் அமமுக இணைந்து செயல்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார். 

டிடிவி தினகரன்

ஐனவரி மாதம் ஓ.பி்எஸ் சார்பில் நடைபெறும் மாநாட்டிற்கு அழைத்தால் பங்கேற்பது குறித்து யோசிப்போம் என தெரிவித்த அவர், அமமுக ஒபிஎஸ் இடையேயான நட்பு அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் நன்றாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார். அதிமுக - பா.ஜ.ககூட்டணி பிரித்தது குறித்த கேள்விக்கு, இரு கட்சிகள் ஒன்றாக இருந்தனர், இப்போது பிரிந்து இருக்கின்றனர்,அப்படித்தான் பார்க்க முடியும் என தெரிவித்தார். பா.ஜ.கவுடன் கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு, யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது, நிலைப்பாட்டை உரிய நேரத்தில் தெரிவிப்போம் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.