வேலுமணியும், தங்கமணியும் இப்போது ‘நோ’ மணி- தினகரன் கிண்டல்

 
ttv

திருப்பூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு உரையாற்றினார். 

TTV Dhinakaran - Latest news, Political career

அப்போது பேசிய அவர், “திமுகவை செந்தில் பாலாஜியே முடித்துவிடுவார், மின் கட்டண உயர்வு போதும் மீண்டும் திமுக ஆட்சி கவிழ. எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவை கூட்டி ஸ்டாலினையே பொதுச்செயலாளராக அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆட்சி காலத்தில் அதிமுக அமைச்சர்களின் ஊழலை கண்டித்தேன் திருந்தவில்லை. இப்போது அனுபவிக்கிறார்கள். அம்மாவிற்கு துரோகம் செய்துள்ளனர். விலைபோகாத சிங்கங்கள் இன்னும் அதிமுகவில் சிலர் உள்ளனர்.

கொங்கு மண்டலம் கோட்டை என்றார்கள் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் என்னாயிற்று. மணி அண்ணன்களிடம் அப்போதே கூறினேன், அவர்கள் கேட்கவில்லை. இப்போது ரெய்டில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். 1988 ஆம் ஆண்டு என் 26 வய்திலேயே கருணாநிதியை எதிர்கொண்டவர், இந்த எடப்பாடியெல்லாம் எம்மாந்திரம். பாராளுமன்ற தேர்தலில் அமமுக பிரதமரை தேர்ந்தெடுக்கும் நிலையில் இருக்கும். அம்மா ஆட்சி மீண்டும் அமையாததற்கு பழனிசாமியே 100% காரணம். அம்மா சாதி பேதம் இன்றி வழிநடத்திய கட்சியை வட்டார கட்சியாக மாற்றிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. வேலுமணி , தங்கமணியெல்லாம் இப்போ ’நோ’ மணியாகிவிட்டனர். அதிமுக வென்ற 65 தொகுதி என்பது 65,000 கோடி ருபாய் உழைப்பு” எனக் கூறினார்.