அதிமுக பொதுச்செயலாளராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட வர முடியும்- டிடிவி தினகரன்

 
ttv

மதுரை திருப்பரங்குன்றம் அருகே விரகனூரில் தனியார் மண்டபத்தில் அமமுக உள்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேர்தல் பிரிவு செயலாளர் மகேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட 800 பேர் கலந்துகொண்டனர்.

Tamil Nadu Polls | TTV Dhinakaran is caught between a rock and a hard place

கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், “ஆர்.கே.நகர் தேர்தல் முடிந்த பின் ஜெயலலிதாவின் பெயரில் கட்சியை தொடங்கவேண்டும் என எண்ணினேன் ஜெ.மறைவிற்கு பின் நடந்தது அம்மாவின் ஆட்சியும் அல்ல, கட்சியும் அல்ல. ஜெயலலிதாவின் ஆட்சியை வழிநடத்துவதாக கூறி தவறாக ஆட்சி செய்தார்கள் அதனால் அவர்களை கண்டித்தேன். ஆர்கேநகரில் தேர்தலில் நிற்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை, அந்த காலகட்டத்தில் தளவாய்சுந்தரம் போன்றோர் தான் பொதுச்செயலாளர் சின்னம்மாவை சந்தித்து என்னை தேர்தலில் நிற்க வேண்டும் என கூறினார்கள். அப்போது தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு நான் தலைமைக்கு வந்துவிடுவேன் என்ற பயம் வந்தது. எடப்பாடி அணியினரை ஊழல் செய்யாதீர்கள் என சொன்னேன் ஆனால் அவர்கள் கேட்கவில்லை .அதனால்தான் தனிக்கட்சி்தொடங்க எண்ணினேன்.

தற்போது எடப்பாடி அணியினர் செய்த ஊழலுக்கு நாள்தோறும் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
காக்கிச்சட்டைக்கே அஞ்சும் எடப்பாடி அணியினர் லஞ்ச ஒழிப்புத்துறை என்றால் என்ன ஆவார்கள் என உங்களுக்கே தெரியும். மடியிலயே டன் கணக்கில் பயம் உள்ளது. பதவியை காப்பாற்ற மட்டுமே உள்ளனர், தொண்டர்களையோ, அம்மாவின் ஆட்சியை காப்பாற்றமாட்டார்கள்.வினை விதைத்தவர்கள். வினை அறுப்பான் என்ற நிலையை அனுபவிப்பார்கள். நம்பிக்கை துரோகத்திற்கு மன்னிப்பு இல்லை

அதிமுகாவில் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் கூட பொதுச்செயலாளாரக முடியும். நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் அவர்களது காலத்திலயே அழிந்துபோவார்கள். பதவி என்பதை எதிர்பார்த்தவர்கள் தான் நம்மிடம் இருந்து ஓடிவிட்டனர். அமமுக ஆட்சிக்கு வந்தால்தான் ஜனநாயக முறைப்படி அதிமுகவை மீட்க முடியும். 5 வருடத்தில் 3 பொதுச்செயலாளரை மாற்றிவிட்டார்கள். தற்போது அதிமுக தொண்டர்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதிமுகவை மீட்டெடுப்பவர்கள் அமமுகவினர் தான். அதிமுகவின் சண்டையை நாம் கண்டுகொள்ளவேண்டாம், நமது சின்னம் குக்கரையும், அமமுகவின் கொடியையும் பட்டி தொட்டி எங்கும் எடுத்துசெல்ல வேண்டும், உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிர படுத்த வேண்டும். அம்மாவின் உண்மையான இயக்கம் அமமுக தான். நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரும் என நான் எண்ணுகிறேன். ஒன்றிய அளவில் சரியான நிர்வாகிகளை அணிவாரியாக நியமனம் செய்யுங்கள். ஆகஸ்ட் 15ஆம் தேதி அமமுக பொதுக்குழு, செயற்குழு நடைபெறவுள்ளது” எனக் கூறினார்.