"மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என முன்பே தெரியும்"- டிடிவி தினகரன்
3-வது முறை பிரதமர் மோடி அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்பது அன்றே தெரியும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் பாஜக கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என்றும், தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “கருத்துக்கணிப்பில் மீண்டும் மோடி ஆட்சி அமையும் எனக் கூறப்படுகிறது. கருத்துக்கணிப்பின்படி, அதிமுகவுக்கு எதிர்பார்த்த தொகுதிகளில் வெற்றி கிடைக்கவில்லை. மூன்றாவது முறை பிரதமர் மோடி அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்பது அன்றே தெரியும். அம்மாவின் தொண்டர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே எனது ஆசை. எனக்கு இறை நம்பிக்கை உள்ளது. நான் எல்லா கோயிலுக்கும் செல்வேன். மற்ற தலைவர்கள் கோயிலுக்குச் செல்வது பற்றி பேசுவது மரியாதையாக இருக்காது” என்றார்.