ஈரோடு இடைத்தேர்தல்- அமமுக வாபஸ் பெற்ற நிலையில் டிடிவி தினகரன் ஆலோசனை

 
TTV

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இருந்து குக்கர் சின்னம் கிடைக்காததால் தனது வேட்பாளரை வாபஸ் பெற்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மற்றும் மொடக்குறிச்சி அமமுக நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினர்.

ttv dhinakaran


ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த அமமுக அதற்கான வேட்பாளரையும் அறிவித்து அந்த வேட்பாளரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து தேர்தல் ஆணையம் அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று தெரிவித்ததால் இடைத்தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாகவும் வேட்பாளர் வாபஸ் பெறுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருந்த நிலையில் வேட்பு மனு வாபஸ் பெரும் கடைசி நாளில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிவப்பிரசாத் தனது வேர்ப்பு மனுவை வாபஸ் பெற்றார்.  மேலும் நடைபெறக்கூடிய இடைத்தேர்தலில் அமமுக எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்திருந்தார்.

இடைத்தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுவரக்கூடிய சூழ்நிலையில் ஈரோடு சாணார்பாளையம்  அருகே மேட்டுக்கடை பகுதியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மற்றும் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அமமுக  நிர்வாகிகளை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும் இளைஞர் அணி மகளிர் அணி கட்சி நிர்வாகிகள் என தனித்தனியாக அழைத்து சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நடத்த நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் கட்சியின் நிலைப்பாடு கட்சியின் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு கட்சியை எவ்வாறு எடுத்துச் செல்வது என்பதை பற்றி மட்டுமே ஆலோசிக்கப்பட்டதாகவும் இடைத்தேர்தல் குறித்து எந்தவித ஆலோசனையிலும் ஈடுபடவில்லை என இந்த ஆலோசனையில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் தெரிவித்து இருந்தனர். மேலும் இந்த கூட்டத்தில் அமமுக சார்பில் அறிவிக்கப்பட்டு பின்னர் இடைத்தேர்தலில் இருந்து வாபஸ் பெற்ற வேட்பாளர் சிவபிரசாத்தும் கலந்து கொண்டார்.