தமிழகத்தில் பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் ஸ்டாலின் டாஸ்மாக்கை ஏன் மூடவில்லை.. - டிடிவி தினகரன் கேள்வி..

 
டிடிவி தினகரன், மு.க. ஸ்டாலின்


தமிழ் நாட்டில் கொரொன பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் டாஸ்மாக்கை மூடாதது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  அதன்படி நாளை முதல் நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கும்,  ஞாயிற்றுக்கிழமைகளில்  முழு ஊரடங்கும் அமலுக்கு வருகிறது.  இதேபோல் பள்ளிகளில்  1 முதல் 9 வகுப்பு வரை  ஆன்லைன் வகுப்புகள் நடத்தவும்,  மருத்துவம் அல்லாது பிற கல்லூரிகளுக்கு ஜன.20 வரை விடுமுறை அளித்தும் உத்தரவிடப்படுள்ளது.  வழிபாட்டுத் தளங்கள், திரையரங்குகள் என பல புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.

ஊரடங்கு

இப்படி பல புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் தமிழக முதலமைச்சர் டாஸ்மாக்கை ஏன் மூடவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியிருப்பதால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிற முதலமைச்சர் திரு.ஸ்டாலின், டாஸ்மாக் மதுக்கடைகளை மூடாமல் விட்டிருப்பது ஏன்?

டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் இனி நிம்மதியா சரக்கடிக்கலாம்?!..

நோய் பரப்பும் இடங்களாக செயல்படும் டாஸ்மாக் கடைகளையும், மதுபானக்கூடங்களையும்(Bar) மூடாமல் கொரோனாவைத் தடுக்கும் அரசின் நடவடிக்கைகள் முழுமை பெறாது. தேவைப்பட்டால் இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கடந்த ஆண்டுகளில் திரு.ஸ்டாலின் விடுத்த அறிக்கைகளை அவரே திரும்ப எடுத்து படித்து பார்த்து கொள்ளலாம். ” என்று குறிப்பிட்டுள்ளார்.