வன்மத்தின் உச்சம்... 11 தொகுதிகள் அல்ல புதைக்குழியை தினகரனுக்கு ஒதுக்கிய இபிஎஸ்
NDA கூட்டணியில் போட்டியிடும் அமமுகவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கியிருப்பது தொகுதிகள் அல்ல, 11 புதைக்குழி என அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

அமமுக போட்டியிடும் தொகுதிகள்
- பெரியகுளம்
- மன்னார்குடி
- திருவையாறு
- காரைக்குடி
- திருப்பத்தூர்
- நாங்குநேரி
- ஒட்டப்பிடாரம்
- திருச்சி மேற்கு
- சைதாப்பேட்டை
- பூந்தமல்லி
- மடத்துகுளம்
அதிமுக கூட்டணியில் சைதாப்பேட்டை தொகுதி டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் தற்பொழுது அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இந்த தொகுதியில் திமுக vs அமமுக இடையே போட்டி நிலவுகிறது. அமமுவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள பெரியகுளம், மன்னார்குடி, திருவையாறு, திருப்பத்தூர், சைதாப்பேட்டை தொகுதிகளை கடந்த முறை திமுக 20ஆயிரம் முதல் 53ஆயிரம் வரை வாக்கு வித்தியாசத்தில் வென்றிருந்தது. 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரசிடம் தோல்வியடைந்த காரைக்குடி தொகுதியை பாஜகவும், 16ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த நாங்குநேரி தொகுதியை அதிமுகவும், கமுக்கமாக, இந்த முறை அமமுக பக்கம் தள்ளிவிட்டுள்ளது.
இதைவிடவும் கொடூரம் என்னவென்றால் திருச்சி மேற்கு மற்றும் பூவிருந்தமல்லி தொகுதியை அமமுக பக்கம் தள்ளிவிட்டது தான். திருச்சி மேற்கில் திமுகவின் அண்ணன் KN நேரு 85ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலும், பூவிருந்தமல்லியில் அண்ணன் கிருஷ்ணசாமி 94ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலும் வென்றிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

