உத்தரகாண்டில் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும்.. கருத்து கணிப்பு தகவல்

 
பா.ஜ.க.

எதிர்வரும் உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 44 முதல் 50 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என்று கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

உத்தர பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களை முன்னிட்டு டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில் பல ருசிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. எதிர்வரும் உத்தர காண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என்று டைம்ஸ்நவ் கணித்துள்ளது.

புஷ்கர் சிங் தாமி

எதிர்வரும் உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலில்  மொத்தமுள்ள 70 தொகுதிகளில், பா.ஜ.க. 44 முதல் 50 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் 12- 15 இடங்களை வெற்றி பெறும் என்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு 5 முதல் 8 இடங்கள் கிடைக்கும் என்று டைம்ஸ்நவ் கணித்துள்ளது. எதிர்வரும் தேர்தலில் டபுள் என்ஜின் அரசாங்கம் காரணி பா.ஜ.க.வுக்கு சாதகமாக இருக்கும் என்று கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 49 சதவீதத்துக்கும் அதிகமானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஹரிஷ் ராவத்

டைம்ஸ்நவ் கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 42.34 சதவீதம் பேர் தங்களது விருப்பமான  முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு ஆதரவு அளித்துள்ளனர். அடுத்தபடியாக காங்கிரஸின் ஹரிஷ் ராவத்துக்கு ஆதரவாக 23.89 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். அதேசமயம் 14.55 சதவீதம் பேர் ஆம் ஆத்மியின் கர்னல் அஜய் கொத்தியாலை மாநிலத்தின் அடுத்த முதல்வராக விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.