அமைச்சர்களை எதிர்கொள்ள பயமா? கூட்டணி கட்சிகளிடம் அதிமுக தள்ளிய ‘அந்த 14 தொகுதிகள்’
அதிமுக கூட்டணியில் அமமுகவிற்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அதில் 3 தொகுதிகள் தற்போதைய திமுக அமைச்சர்களின் தொகுதியாகும்.

தமிழக அமைச்சரவையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சேர்த்து மொத்தம் 34 அமைச்சர்கள் உள்ளனர். அதில், 13 அமைச்சர் தொகுதிகள், ஒரு சபாநாயகர் தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியிருக்கிறது அதிமுக. இதில், அதிகப்படியான அமைச்சர் தொகுதிகள் பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
1) ஐஜேகே;
குன்னம் - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
2) தமாகா;
ஒட்டன்சத்திரம் - அமைச்சர் சக்கரபாணி
ஈரோடு(மேற்கு) - அமைச்சர் முத்துசாமி
ராணிப்பேட்டை - அமைச்சர் ஆர்.காந்தி
3) அமமுக;
சைதாப்பேட்டை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மன்னார்குடி - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா
4) பாமக;
சேலம்(வடக்கு) - அமைச்சர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன்
5) பாஜக;
திருப்பத்தூர் - அமைச்சர் பெரியகருப்பன்
திருச்செந்தூர் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
பத்மநாபபுரம் - அமைச்சர் மனோ தங்கராஜ்
ஆவடி - அமைச்சர் நாசர்
திருவண்ணாமலை - அமைச்சர் எவ வேலு
ராசிபுரம் - அமைச்சர் மதிவேந்தன்
ராதாபுரம் - சபாநாயகர் அப்பாவு

