இதை வைத்து தானே இந்த வெற்றி! வைரலாகும் போட்டோ

 
எ

ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்கு வித்தியாசத்தை முந்தி உள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்று திமுகவினரும் அதன் கூட்டணி கட்சிகளும் கொண்டாடி வருகின்றனர்.   ஆனால் இந்த வெற்றி எல்லாம் ‘இதை வைத்து தானே’ என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.  அதாவது வாக்காளர்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப்பட்ட பணத்தினாலும் பரிசு பொருட்களினாலும் தானே இந்த வெற்றி என்று அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எவ்

 திருமங்கலம் இடைத்தேர்தல் ஃபார்முலாவை மிஞ்சி விட்டது ஈரோடு இடைத்தேர்தல் ஃபார்முலா.  ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி மக்களாட்சியை படுகுழிக்குள் தள்ளப் போகிறது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் என்று பலரும் ஆவேசப்பட்டு வந்தனர் .  

திமுக, அதிமுக இரண்டு கட்சியியும் போட்டி போட்டுக்கொண்டு  பரிசு பொருட்கள் மற்றும் பணம் பட்டுவாடாக்களை செய்தன.   ஆனலும் இதில் ஆளுங்கட்சியை அதிமுகவால் முந்த முடியவில்லை என்கிறார்கள் அத்தொகுதி மக்கள். மக்களிடம் பணமும் பரிசு பொருட்களும் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அப்படியும் அவர் எதிரணிக்கு மனம் மாறி வாக்குகள் அளித்து விடக்கூடாது என்பதற்காக ஆடுகளை அடைத்து வைப்பது மாதிரி மனித பட்டியில் தினமும் மக்களை அடைத்து வைத்து தலைக்கு 500 ரூபாய், 1000 ரூபாய் கொடுத்து சாப்பாடு போட்டு புதிய ஃபார்முலாவை கண்டுபிடித்தது திமுக.   இதைத்தான் அதிமுக கடுமையாக விமர்சித்து வந்தது.   சீமானும் கடுமையாக விமர்சித்து வந்தார் .    மக்களை ஒரு இடத்தில் அடைத்து வைத்து சாப்பாடு போட்டு பணம் கொடுத்து புது சினிமாக்களையும் காட்டி வந்தார்கள். 

ஜ்

 எவர்சில்வர் குடம், சேலைகள், கொலுசு, குக்கர், எவர்சில்வர் தட்டு, சில்வர் டம்ளர்,   ஒரு கிராம் தங்க காசு, குத்துவிளக்கு,  ஏர் பார்ட்ஸ், எலக்ட்ரிக் ஸ்டவ், ஜூஸ் மிக்சர், லெதர் ஹேண்ட்பேக்,   உள்ளிட்டவைகளை வழங்கினார்கள்.    பிரபல துணிக்கடையில் வேட்டி சட்டை சேலை அடங்கிய கிப்ட் பேக்கையும் வீடு வீடாக வழங்கி வந்தார்கள்.   அதுமட்டுமல்லாமல் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கும் திட்டத்தையும் கையில் எடுத்தார்கள். வயதுக்குட்பட்ட இளையோருக்கு ஸ்மார்ட் வாட்ச்சும்,  35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் , பெண்களுக்கும் லெதர் வாட்ச்,  தங்க நிற செயின் வாட்சுகளையும் வாரி வழங்கினார்கள்.

 இந்த பரிசுகள் மட்டுமல்லாத பண பட்டுவாடாவும் நடந்தது.  ஒரு ஓட்டுக்கு 3 ஆயிரம் வரைக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.  தினமும் மட்டன், சிக்கன் பிரியாணி, குவார்ட்டர் பாட்டில் வேறு.    குறுமிளகு ,கிராம்பு, பட்டை, ஏலக்காய், டீ வர்க்கிகளையும் பாக்கெட்டில் அடக்கி வைத்து மக்களுக்கு கொடுத்து வந்தார்கள்.  இது போதாது என்று ஆயிரம் ரூபாய்க்கு மளிகை சாமான் கூப்பன் வேறு.  

 இந்த இடைத்தேர்தலில் சில குடும்பங்கள் தங்களின் சிறு , குறு கடன்களை அடைத்து விட்டதாக சொல்கிறார்கள் அப்பகுதியினர்.    

மி

இதையெல்லாம் தடுக்க வேண்டிய பறக்கும் படை படுத்து தூங்குகிறதா என்ற கேள்வியை  எழுப்பி வந்தனர் சமூக ஆர்வலர்கள். இதனால், இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் மற்ற வேட்பாளர்கள் முகத்தில் தேர்தல் ஆணையம் கரியை பூசிவிட்டதால்தான்,  கரியைப் பூசிக்கொண்டு பிரச்சாரம் செய்தார் ஒரு வேட்பாளர்.  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுத்து தண்டனை பெற்று தரும் நேர்மையான தேர்தல் அதிகாரிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு விழா என்றும், ஒரு கோடி ரூபாய் பரிசு மற்றும் பாராட்டு விழா என்று அறிவித்திருந்தார் கரூரைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன்.

இதனால் இதுவரை யாரும் பெறாத வெற்றியை பெற்றுவிட்டார் இளங்கோவன் என்ற கொண்டாட்டத்திற்கு,  ‘இதை வைத்துதானே?’’என்று கேட்டு வருகின்றனர்.  மேலும்,  இடைத்தேர்தலில்"150வருட" பாரம்பரிய கட்சியில் 2ம் தலைமுறை அரசியல்வாதி 35வருடங்கள் எம்எல்ஏ/எம்பி/மத்திய அமைச்சராக இருந்தவருக்கு வெற்றி பெற கூட்டணி கட்சிகளின்(25+அமைச்சர்கள்,எம்பிக்கள்,முதல்வர் உள்பட)பிரச்சாரம், ஓட்டுக்கு பொருள்/பணம் இவை தேவைப்படுகிறது என்றால் யார்/எது சரியில்லை? என்றும் கேள்வியை எழுப்பி வருகின்றனர்.