ஆங்கிலேய அரசை விட ஆபத்தானது இந்த மோடி அரசு - அரவிந்த் கெஜ்ரிவால்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராகுல் காந்தியின் எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்திருக்கிறது பாஜக அரசு. இதனால் ராகுல் காந்தியால் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்ற அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது காங்கிரஸ்.
பாஜகவின் இந்த தடாலடி நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்திருக்கிறார். ஆங்கிலேய அரசை விட ஆபத்தானது இந்த பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
நம் முன்னோர்கள் சுதந்திரத்திற்காகவும் ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டும் என்றும் போராடினார்கள். ஆனால் இன்றைய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு ஆங்கிலேயர்களை விட ஆபத்தானது. இது காங்கிரஸின் போராட்டம் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டின் போராட்டம் . இப்போது நாட்டு மக்கள் முன் வந்து இதை எதிர்த்துப் போராட வேண்டும். நாட்டைக் காப்பாற்ற வேண்டுமானால் 130 கோடி மக்கள் முன் வந்து தேசத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறி இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்,
ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை ரத்து செய்த விதம் ஒரு கோழைத்தனமான செயல். இது ஒரு பயமுறுத்தும் அரசாங்கத்தின் அடையாளம். நாட்டில் ஒரே கட்சி ஒரே தலைவர் மட்டுமே இருக்க கூடிய சூழ்நிலையை உருவாக நினைக்கிறார்கள் என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.