ஜெயலலிதாவிடம் கருணாநிதிக்கு பிடித்தது இதுதான்! ஆ.ராசா பேச்சு

 
kj

அதிமுகவிற்கும் திமுகவிற்கும் ஆயிரம் இருக்கும்.  ஆனால் ஜெயலலிதாவிடம் பிடித்தது என்ன என்று கருணாநிதியிடம் கேட்டபோது,  ஜெயலலிதாவின் துணிச்சல் என்று பதில் அளித்தார் என்று பேசிய திமுக எம்பி ஆ. ராசா,  மத்திய அரசிடம் ஜெயலலிதா பணிந்து போகாமல் இருப்பது குறித்து குறிப்பிட்டு,  தற்போதைய அதிமுகவினர் மத்திய அரசிடம் பணிந்து போகிறார்கள் என்று குத்தி காட்டினார். 

r

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக எம்பி ஆ. ராசா வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது பேசிய ஆ . ராசா ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என்பது இந்திய அரசை அடுத்து யார் ஆளப்போகிறார்கள் என்பதை தீர்மானிக்கின்ற தேர்தல் என்றார்.

 தொடர்ந்து பேசிய ஆ.ராசா,  அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை தீர்மானிக்கும் தேர்தல் இந்த தேர்தல் . நடைபெறுகின்ற நல்லாட்சிக்கு சான்றிதழ் அளிக்கின்ற தேர்தல் என்று குறிப்பிட்டார் .

அதிமுக குறித்து பேசிய ராசா, அதிமுக எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி.  அதிமுகவிற்கும் திமுகவிற்கும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் உண்டு.  சரியோ தவறோ ஆயிரம் கருத்து வேறுபாடுகள் நிறைய உண்டு. ஆனாலும் மத்திய அரசு முன்பு ஜெயலலிதா எப்போதும் மண்டியிட்டது கிடையாது.   இதனால்தான் ஜெயலலிதாவிடம் பிடித்தது என்ன என்று கேள்விக்கு,  அவரது துணிச்சல் பிடிக்கும் என்று கருணாநிதி பதில் அளித்தார் என்று குறிப்பிட்டு பேசினார்.

 அதாவது,  மத்திய அரசிடம் ஜெயலலிதா பணிந்து போகாமல் இருந்தார்.  ஆனால் ,   தற்போதைய அதிமுகவினர் மத்திய அரசுக்கு அடிபணிந்து போகிறார்கள் என்று குத்திக்காட்டினார்.