தேர்தலுக்கு பின் அதிமுகவில் நடந்தது இது தான்!

 
s

வேலுமணி, சி.வி.சண்முகம் அணியில் இருந்த 5 எம்எல்ஏக்கள் பழனிசாமியை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்.

​சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களை மட்டுமே வென்றதால் கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ​எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியும் என பிரிந்தது. ​சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததால் அதிமுக இரு பிரிவுகளாக உடைந்தது. ​சி.வி.சண்முகம் தரப்பை சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். ​தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்களின் கட்சிப் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தார். திமுகவுடன் சேர்ந்து ஆட்சியமைக்க முயன்றதாக எடப்பாடி பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டியிருந்தார்.

​கட்சி கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் மனு அளித்தனர். ​சி.வி.சண்முகம் தரப்பை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் பதவியை துறந்து தவெகவில் இணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ​வேலுமணி, சி.வி.சண்முகம் அணியில் இருந்த 5 எம்எல்ஏக்கள் பழனிசாமியை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர். ​பின்னடைவை சந்தித்ததால் மீண்டும் சமாதானமாக செல்ல வேலுமணி தரப்பு முடிவு செய்தது, இன்று இபிஎஸ் இல்லத்தில் இரு தரப்பும் சமரசம் பேசியது. சமரச முயற்சி கைகூடியதால் இபிஎஸ் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் ஒன்றாக இணைந்து சபாநாயகரை சந்தத்தனர். இபிஎஸ்-ஐ சட்டமன்ற குழு தலைவராக ஏற்க ஒற்றுமையாக கடிதம் வழங்கினர். இந்நிகழ்வில் சி.வி.சண்முகம், அருண்மொழித்தேவன், விஜயபாஸ்கர் மட்டும் இந்த பங்கேற்கவில்லை. அதிமுக ஒன்றுகூடிய நிலையில் சி.வி.சண்முகத்தை சமாதானம் செய்ய S.P.வேலுமணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதிமுகவில் அனைவரும் மீண்டும் ஒன்றுசேர்ந்த நிலையில் சி.வி.சண்முகம் முடிவு என்ன? என்பது கேள்வி குறியே...