இதுதான் திமுக, பாஜகவுடன் இபிஎஸ் போட்ட ரகசிய ஒப்பந்தம் - போட்டுடைத்த கேசிபி

 
t

அதிமுகவுக்கு ஒன்றரை கோடி உறுப்பினர்கள் உள்ளார்கள் என்று அக்கட்சியின் மறைந்த முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தொடர்ந்து சொல்லி வந்தார். அவருக்கு அடுத்ததாக ஓ .பன்னீர்செல்வம்,  எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் சொல்லி வருகிறார்கள்.

ஒஎ

 இந்த நிலையில் தற்போதைய திமுக தலைவரும் முதல்வருமான மு. க. ஸ்டாலின்,  திமுகவிற்கு ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட அக்கட்சியினர் அதற்கான வேலைகளில் தீவிரமாக களம் இறங்கி இருக்கின்றனர்.  இதை அடுத்து அதிமுகவின் தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும்  அதிமுகவின் உறுப்பினர்கள்  பட்டியலை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என்று கட்சியினருக்கு உத்தரவிட,   புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் அக்கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ச்

 இது ஒரு புறம் இருக்க,   பாஜகவின் ஆதரவாளர் ஓபிஎஸ் என்ற பேச்சு மறைந்து , இப்போது  எடப்பாடி பழனிச்சாமிக்குத் தான் பாஜக ஆதரவளிக்கிறது என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சொல்லி வருகின்றனர்.    நீதிமன்றத்தில் எடப்பாடி பக்கம் தீர்ப்பு சாதகமாக வந்ததால்,   அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி தீர்த்தனர். அப்போது எம்ஜிஆரை போலவே தொப்பி, கண்ணாடி, சால்வை எடப்பாடிக்கு அணிவித்து மகிழ்ந்தார்கள்.  இது எம்ஜிஆர் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து  எம் ஜி ஆர் உடன் பழகியவரும் அதிமுகவின் முன்னாள் எம்பீியுமான கேசி பழனிச்சாமி,   ‘’எம்.ஜி.ஆரைப் போன்று தொப்பி அணிந்தால் உறுப்பினர்கள் சேர்ந்து விட மாட்டார்கள். பணம் மட்டும் தான் அரசியல் தலைவருக்கு உண்டான ஒரே அரிச்சுவடி என்று நம்பி திராவிட கொள்கைகளையும், நற்பண்புகளையும், உதவும்-குணங்களையும் மறந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி’’என்று விமர்சித்துள்ளார். 

அவர் மேலும்,   ‘’திமுகவுடன் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக முன்னாள் அமைச்சர்களும் ரகசிய ஒப்பந்தத்தில் இருக்கின்றனர். ஊழல் வழக்குகள், குட்கா வழக்குகள் மற்றும் இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து அவர்களைப் பாதுகாக்க மட்டுமே பாஜக கூட்டணி தேவைப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை பயன்படுத்தி அதிமுகவை அழித்து பாஜகவை வளர்ப்பதுதான் பாஜகவின் திட்டம்’’என்கிறார்.