அமைச்சர் நாசர் மகன் பதவி பறிப்புக்கு இதுதான் காரணமாம்

 
uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu

அமைச்சர் நாசரின் மகன் ஆஷிம் ராஜா பதவி பறிப்புக்கு இதுதான் காரணம் என்று ஒரு தகவல் பரவுகிறது.  

 தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் ஆஷிம் ராஜா.   இவர் திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட திமுக ஆவடி மாநகர செயலாளர் ஆக இயங்கி வந்தார்.   கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த திமுக உட்கட்சி தேர்தலில் ஆவடி மாநகர செயலாளர் ஆக தேர்வு செய்யப்பட்டார் ஆசிம் ராஜா.   ஆவடி மாநகராட்சி கவுன்சிலராகவும் , மண்டல குழு தலைவராகவும் இவர் பொறுப்பு வைத்து வந்தார்.  ஆனால் யாருமே எதிர்பார்க்காத விதமாக ஆவடி மாநகர திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து ஆசிம் ராஜாவின் பதவி பறிக்கப்பட்டது.  அவருக்கு பதிலாக ஆவடி மாநகர திமுக செயலாளர் ஆக சன் பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். 

as

 இந்த அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.   கடந்த 7ஆம் தேதி இந்த அறிவிப்பை  வெளியிட்டுள்ளார்.   பால்வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் பதவி பறிக்கப்பட்டது திமுகவில் மட்டுமல்லாது தமிழக அரசியலில் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது .

ஆசிம் ராஜாவின் பதவி பறிப்புக்கான காரணமாக சில தகவல்கள் பரவி வருகின்றன.   ஆவடி மாநகராட்சி பணிக்குழு தலைவராக இருப்பதால் ஆஷிம் ராஜா மாநகராட்சி பணிகளுக்கான ஒப்பந்த விவகாரத்தில்  அவரின் தலையீடு   அதிகம் இருப்பதாக கட்சி நிர்வாகிகள் இதனால் அதிர்ச்சி அடைந்து இருப்பதாகவும் தலைமைக்கு அதிகம் புகார்கள் பறந்துள்ளன.

 இதை எடுத்துதான் ஆசிம் ராஜாவின் பதவி பறிக்கப்பட்டு இருக்கிறது என்கிறார்கள்.  ஆவடி மாநகர திமுக பொறுப்பாளராக தற்போது நியமிக்கப்பட்டு இருக்கும் சன் பிரகாஷ் ஆவடி நாசசர்   ஆதரவாளர் அல்லாதவர்.   இதுவே திமுகவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது .  ஏனென்றால் கடந்த 25 ஆண்டுகாலமாக திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி நாசரின் ஆதரவாளர் அல்லாத ஒருவர் கட்சி பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்கிறார்கள்.