இது சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் தான்.. #நிழலும்நிஜமும்

 
e

ஆடவிட்டு அக்கிரமத்தின் உச்சத்தை தொடவிட்டு அதன்பிறகு தான் கெட்டவர்கள் வேரோடு வீழ்த்தப் படுகிறார்கள்.  இது சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் தான்.. என்று இபிஎஸ் அணிக்கு சொல்கிறார் ஓபிஎஸ் அணியைச்சேர்ந்த மருது அழகுராஜ்.

இபிஎஸ் அணிக்கு இவ்வாறு சொல்லி இருக்கும் மருது அழகுராஜ்,  அதிமுகவில் தற்போது நடக்கும் பிரச்சனைகளை எல்லாம் மனதில் வைத்து,  எது நடந்தாலும் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓபிஎஸ் பின்னால்தான் தனது பாதம் செல்லும் என்கிறார்.

o

இதை அவர் புதுக்கவிதை வடிவில்..

இன்னல்
வரும் போது
தன்னை
அறியாது
மின்னல்
என
வந்து விழும்
வார்த்தை
அம்மா..
அது சாதி
மத பேதம்
கடந்து
சஞ்சலம்
வரும் போதெல்லாம்
சாய்ந்து
கொள்ள
மனம் தேடும்
மாமருந்துச்
சொல்.
ஆம்...
உலகில்
தடம்
பதிக்கும்
உயிர்கள்
யாவும்
உதிர்க்கும்
முதல் வரி....


அம்மா..
ஒன்றரைக்
கோடி
தொண்டர்களுக்கோ
அதுவே
முகவரி...
ஆதி அந்தம்
தேடியும்
அகராதி
பல
நாடியும் 
அளவிடவே
முடியாத
அறிவுப்
பொக்கிஷம் 
"அ"என்னும்
உயிருமாக
"ம்" என்னும்
மெய்யுமாக
"மா'என்னும்
உயிரும்
மெய்யுமாக
அழகு தமிழ்
கோர்த்துக்
கொடுத்த
ஆச்சரியத்
தோரணம்..

ma
தாயின்
பாதத்தின்
கீழ் தான்
சொர்க்கம்
இருக்கு என்ற 
தாஹாநபி 
சொன்னதற்கு
ஆதாரமாகிப்போன
தாய்க் காவியம்..


அந்த
எங்கள்
அம்மா
சொன்னது தான்
எங்களுக்கு 
வேதம்..
அவர்
அடையாளம் காட்டிய
தங்கமகன்
ஓ.பி.எஸ்
வழியில் மட்டுமே
எங்கள்
பாதம்..