இது சினிமா வசனம் அல்ல - கமலுக்கு பாஜக பதில்

 
k

மத்திய அரசின் 2023 -24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நேறு தாக்கல் செய்யப்பட்டது.  நடப்பு  ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது.  நாடாளுமன்றத்தின் முறைப்படி இரண்டு அவைகளிலும் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார் . இந்த உரை முடிந்ததும் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது . அதை அடுத்து நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் 2023 -2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.    இந்த ஆட்சியின் கடைசி முழு நேர பட்ஜெட் இது என்று நாட்டின் வரவு செலவு திட்டங்களை மத்திய நிதியமைச்சர் ஆண்டுக்கு ஒரு முறை அறிக்கையாக தாக்கல் செய்வார்.   இதை மத்திய பட்ஜெட் என்று அழைக்கப்படுகிறது.  

 கூட்டத்தொடரில் முதல் அமர்வு அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.   இரண்டாவது அமர்வு  மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி வரை நடைபெற இருக்கிறது.   இதற்கிடையில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.  

n

 கோடிக்கணக்கான மக்கள் அன்றாட வாழ்வை நகர்த்த அல்லாடும் சூழலில் இந்தியப் பொருளாதாரம் பிரகாசிக்கிறது என்ற வெற்றுப்  பெருமையுடன் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட்டில் ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்த நேரடிப் பயன் தரும் திட்டங்கள் இல்லை என்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். 

அவர் மேலும், நடுத்தர வர்க்கத்திற்கான சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருவாய் இழப்பால் தவிக்கும் மிடில்க்ளாஸ் மக்களுக்கு இந்த வரிச்சலுகையால் பெரிய பலன் இருக்கப்போவதில்லை. கிராமப் பொருளியலை மேம்படுத்த, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க அறிவிப்புகள் ஏதும் இல்லை.  சேமிப்பிற்குப் பதிலாக, செலவை ஊக்குவிக்கும் திட்டங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உற்சாகமளிக்கும் அறிவிப்புகளும்தான் பட்ஜெட்டில் பளிச்சிடுகின்றன. வடக்கிற்குச் செழிப்பான, தமிழ்நாட்டிற்குப் பெரிய அறிவிப்புகளோ நிதி ஒதுக்கீடுகளோ இல்லாத, ஏமாற்றங்கள் மிகுந்த பட்ஜெட்தான் இது என்கிறார்.

இதற்கு தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி,  சினிமாவில் வசனத்தை யாரோ எழுதி கொடுப்பதை படிப்பது போல் அரசியலிலும் அறிக்கை விட வேண்டாம் என்கிறார்.  அவர் மேலும்,  செலவை குறைத்து, சேமிப்பை அதிகரித்து. வடக்கு,தெற்கு என பிரித்து பார்க்காத சமத்துவ பட்ஜெட் இது நடுத்தர வர்க்கத்தை உயர்த்தி, கிராமப்புறத்தை மேம்படுத்தி,வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பட்ஜெட் இது என்கிறார் .