இது தற்காலிக முடிவு! இந்த ஒப்புதல் எடப்பாடிக்கு கிடைத்த அங்கீகாரம் அல்ல - பண்ருட்டியார் விளக்கம்

 
p

நீதிமன்றங்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பளித்த போதும் தேர்தல் ஆணையத்தை மட்டுமே இறுதியாக நம்பி இருந்தார் ஓ. பன்னீர்செல்வம்.  ஆனால் தேர்தல் ஆணையமும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளது.  

oe

 கடந்த ஜூலை 11ஆம் தேதி அன்று அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்திருக்கிறது . இதையடுத்து அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தபோது,  அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதால் ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் நீக்கம் செல்லும் என்பது உறுதியாகி இருக்கிறது.   இனிமேல் அதிமுக என்றால் எடப்பாடி பழனிச்சாமி,  எடப்பாடி பழனிச்சாமி என்றால் அதிமுக என்ற நிலை வந்து விட்டது.   இனிமேல் ஏறுமுகம் தான் . எடப்பாடி யாருக்கு இனி வெற்றி மேல் வெற்றிகள் குவியும் . அதிமுக பெயர் கட்சி கொடியை இனி வேறு யாராவது பயன்படுத்தினால் வழக்கு தொடருவோம்.  தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அதிமுகவின் பெயர் சின்னம்  மற்றும் கட்சியை யார் உரிமை கோரவும் பயன்படுத்தவும் முடியாது என்று உறுதியாக கூறியிருக்கிறார்.

e

இந்த நிலையில் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசியபோது,  தேர்தல் ஆணையம் கொடுத்த ஒப்புதல் கர்நாடக தேர்தலுக்கான தற்காலிக முடிவு தான் . தேர்தல் ஆணையத்தின் கடிதத்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு அங்கீகாரம் கிடைத்ததாக கருத முடியாது என்கிறார்.

 அவர் மேலும் ,  தேர்தல் ஆணையம் வழங்கிய ஒப்புதல் நீதிமன்றம் முடிவுக்கு உட்பட்டது.  ஒருவரை நீக்க வேண்டுமானால் முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று விளக்கம் அளித்திருக்கிறார்.