திருமாவளவன் தனக்கு கீழ் உள்ளவர்களை மனிதர்களாக மாற்றவேண்டும்; இல்லை என்றால் எங்களிடம் நன்றாக வாங்கி கட்டிக் கொள்வார்கள்- எச்.ராஜா ஆவேசம்

 
h

அநாகரிகமான அடாவடி அமைப்பின் தலைவர் திருமாவளவன்,  தனக்கு கீழ் உள்ள நபர்களை மனிதர்களாக மாற்ற வேண்டும். இதை ஒரு நல்ல யோசனையாக அவர் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் எங்களிடம் நன்றாக வாங்கி கட்டிக் கொள்வார்கள் என்று எச்சரித்துள்ளார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.

பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அடுத்த சோழபுரம் பைரவர் கோவிலில் சாவி தரிசனம் செய்தார்.  பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது,   ’’விடுதலை சிறுத்தைகள் என்கிற அநாகரிகமான அடாவடி அமைப்பின் தலைவர் திருமாவளவன் பாஜகவை அடித்து ஒழித்து விடுவேன் என்று பேசி வருகிறார்.  இது ஒரு தலைவனுக்கான பேச்சாக இல்லை.  அனாவசியமாக அவர் பாஜகவுடன் மோத வேண்டாம்’’ என்று ஆவேசப்பட்டார்.

th

 தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பேசிய எச். ராஜா,   ’’விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேருந்தை அடித்து உடைத்தவர்கள் மீது வழக்கு போடாமல் பாஜக கூட்டத்தை ரத்து செய்ய போலீசார் சொல்வது மிக மோசமான செயல்.   ஆளுங்கட்சியின் தலைமை விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு சாதகமாக இருப்பதால் வரும் காலங்களில் சட்டம் ஒழுங்கு அச்சுறுத்தலாக அமையும் ’’என்று எச்சரித்தார்.

 அவர் மேலும்,   ’’திருமாவளவன் தன்னை திருத்தி கொள்ள வேண்டும்.  அது மட்டுமல்லாமல் தனக்கு கீழ் உள்ள நபர்களை மனிதர்களாக மாற்ற வேண்டும்.  இதை ஒரு நல்ல யோசனையாக அவர் எடுத்துக் கொள்ள வேண்டும்.  இல்லை என்றால் எங்களிடம் நன்றாக வாங்கி கட்டிக் கொள்வார்கள்’’ என்று எச்சரித்தார்.

 இதன் பின்னர் அவர் திமுகவின் மீதான ஆவேச பாய்ச்சலை காட்டினார்.  ’’திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அவர்களே நீதிமன்றத்தில் 2000 கோவில்கள் புனரமைக்கப்படும் என்று கூறி இருக்கிறார்கள்.  ஆனால் இதுவரை செய்யவில்லை.  இவர்களுக்கு செய்ய துப்பு இல்லாவிட்டால் கோவிலை விட்டு வெளியேற வேண்டும். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.  கிராமங்கள் தோறும் கமிட்டிகள் அமைத்து அனைத்து கோவில்களையும் நாங்கள் புனரமைப்போம்’’ என்று சவால் விட்டார்.

 மேலும்,  திமுக ஆட்சிக்கு அவர் சாபம் விட்டார்.   மானம்பாடி கோவில் புனரமைப்பதற்காக 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியும் கூட இதுவரைக்கும் எந்த பணியும் இங்கே நடைபெறவில்லை . அங்கு இருக்கும் விக்கிரகங்கள் சிதறி கிடக்கின்றன.  இதே போல் ஆட்சியில் உள்ளவர்களின் குடும்பங்களும் சிதறி நாசமாக போகும்’’ என்று அவர் சாபமிட்டார்.