தமிழகத்தில் எப்போதுமே இருதுருவ போட்டி தான்.. அடித்துச் சொல்லும் திருமாவளவன்!

 

தமிழகத்தில் எப்போதுமே இருதுருவ போட்டி தான்.. அடித்துச் சொல்லும் திருமாவளவன்!

தமிழகத்தில் 3ஆவது அணி உருவானாலும் இருதுருவப் போட்டி தான் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், தேர்தல் ஆணைய செயல்பாடுகளில் பாஜகவின் தலையீடு இருக்கிறது. 60 தொகுதிகளே அதிகமாகக் கொண்ட மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடத்த வேண்டியதன் அவசியம் என்ன?. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதெல்லாம் நாடகம் தான். அதே போல தான், கடன் தள்ளுபடியும் என்று அதிரடியாக பேசினார்.

தமிழகத்தில் எப்போதுமே இருதுருவ போட்டி தான்.. அடித்துச் சொல்லும் திருமாவளவன்!

தொடர்ந்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் அந்தந்த சமூக மக்கள் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என்பது தெரியும் என்பதால், அதை வலியுறுத்துகிறோம் என்றும் கூறினார். மேலும், எல்லா தேர்தலிலும் 3ஆவது அணி உருவாகுவது வழக்கம் தான் ஆனால், எப்போதுமே தமிழகத்தில் இருதுருவப் போட்டி தான் என்று அடித்துச் சொன்னார்.

மாபெரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவுடன் தேசிய கட்சிகளே கூட்டணி அமைக்க வேண்டிய சூழல் தான் தமிழகத்தில் நிலவுகிறது. இப்படியிருக்கும் சூழலில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கூட்டணி ஆகிய கட்சிகள் திமுக மற்றும் அதிமுகவை எதிர்த்து 3ஆவது அணியாக களமிறங்கவிருக்கிறதாம். இது குறித்தே மேற்கண்டவாறு திருமாவளவன் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.