’’திருமாண்ணே! இந்த பைத்தியத்திற்கு உடனடியாக வைத்தியம் பார்க்கவும்’’

 
வ

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  அருந்ததியர் சாதி குறித்து பேசியது அத்தொகுதியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் சீமானுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன.

வ

சீமான் பேசியது தவறு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் கூறியிருந்தார்.  இந்நிலையில்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளராக வன்னி அரசு  இது குறித்து,   ‘’சாதிவெறி, இனவெறி பிடித்த கும்பலான #ஓம்தமிழர் தம்பிகள்,  ஈரோடு இடைத்தேர்தலில் வைப்புத்தொகையை இழந்ததால்,  கூடுதல் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்.   தம்பிகளுக்கே இப்படியென்றால்,  ஏற்கனவே மனநலம் பாதிக்கப்பட்டு கேரளாவில் சிகிச்சை எடுத்துக்கொண்ட #அட்டகத்தி_சீமான் நிலை என்னவா இருக்கும்?’’என்று கேட்கிறார்.

ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்து விட்டது என்பதைத்தான் வன்னிஅரசு இவ்வாறு கடுமையாக விமர்த்திருக்கிறார்.

இ

இதற்கு நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக்,   ‘’திருமாண்ணே!  இந்த பைத்தியத்திற்கு உடனடியாக வைத்தியம் பார்க்கவும்! இல்லையென்றால், உங்களையும் ஒருநாள் கடித்து குதறும். விசிக என்பதை ஓசிக என உளறும்!  தேர்தலில் தோற்றதிலிருந்தே வயிற்றெரிச்சலிலும், பொறாமையிலும் புலம்பும் இந்த பைத்தியத்தை எப்படியாவது காப்பாற்றுங்கள்! ’’என்கிறார்.

சட்டமன்ற தேர்தலில் விசிக வேட்பாளர் வன்னி அரசுவின் தோல்வி குறித்து இந்த பதிலடி தந்திருக்கிறார் கார்த்திக்.

மேலும்,   ‘’2006 - 11 வரையிலான முந்தைய திமுக ஆட்சியில் நடைபெற்ற திருமங்கலம் உள்ளிட்ட  11 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் வெற்றிபெற்ற திமுக, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்து, எதிர்க்கட்சி அங்கீகாரத்தைக்கூட இழந்தது என்பது சமகால வரலாறு!’’என்கிறார்.