ஜெயலலிதாவின் போர்க்குணம் -காயத்ரிக்கு சொன்ன திருமா

 
g

தமிழக பாஜகவில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கும் கட்சி நிர்வாகி காயத்ரி ரகுராமுக்கும் ஏற்பட்ட தொடர் மோதலில் கட்சியிலிருந்து வெளியேறினார் காயத்ரி ரகுராம்.  அதன் பின்னர் அவர் திமுகவில் இணையப் போகிறார்,  விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணையப் போகிறார் என்று தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டே இருந்தன.   ஆனால் அவர் எந்த கட்சியிலும் இணையவில்லை.

yy

 அண்ணாமலை ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கும் , தமிழ்நாடு முழுவதும் செல்லவிருக்கும்  பாதயாத்திரைக்கு எதிராக தான் பாதயாத்திரை( சக்தியாத்ரா) தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தார் காயத்ரி ரகுராம் .

இந்த நிலையில் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார்.

அதுகுறித்து திருமாவளவன்,  ‘’அம்பேத்கர் திடலுக்கு வந்த காயத்ரி ரகுராம் அவர்களுக்கு 'உலக வரலாற்றில் பெண்கள்' எனும் நூலைப் பரிசாக அளித்தேன். அன்னை சாவித்திரிபாய் ஃபுலே அவர்களின் சகிப்புத் தன்மையும்,  ஜெயலலிதா அம்மையாரின் போர்க் குணமும் பொதுவாழ்வில் ஒவ்வொரு பெண்மணிக்கும் தேவை என்பதைச் சொல்லி அவரை வாழ்த்தினேன்.

ti

கருத்தியல் முரண்களைக் கடந்து மனித உறவுகளுக்கான மாண்புகளைப் போற்றுவது சிறுத்தைகளின் சிறப்பாகும். அம்பேத்கர் திடலுக்கு வருகை தந்த  காயத்ரி ரகுராம் அவர்களை வரவேற்றுச் சிறப்பித்தோம்.  ஏப்-14 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில் அவர் தொடங்கவிருக்கும் சக்தியாத்ரா வெற்றிபெற வாழ்த்தினோம்’’ என்று கூறியிருக்கிறார்.

இதற்கு,  எதிர்பாராத மனிதர்கள் எனக்கு உதவியபோது வி.சி.க. தலைவர், எம்.பி., அண்ணா திரு.தொல் திருமாவளவன் அவர்களுக்கும், வி.சி.க.வுக்கும் எனது நன்றிகள். ஆதரவு அளித்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டிருக்கிறார் காயத்ரி.