அவர்கள் எதையும் செய்ய தயார் நிலையில் தான் இருக்கிறார்கள் -திருமா ஆவேசம்

 
ட்

 கோலாரில் ராகுல்காந்தி  தேர்தல் பிரச்சாரத்தின் போது அவதூறாக பேசியதாக குஜராத்தில் ஒருவர் தொடர்ந்த அவதூறு  வழக்கில் விசாரித்த நீதிபதியையே மாற்றிவிட்டு ஆர்எஸ்எஸ் மனநிலை  நீதிபதியை அமரவைத்து அவர்மூலமாக இந்த இரண்டாண்டு தண்டனையை வழங்க வைத்திருக்கிறார்கள் என்று 
திருவள்ளூரில் நடந்த  செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.

ர

 காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டிருக்கும் இரண்டு ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.   திருவள்ளூரில் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது,   பாஜக அரசியலில் இது மிகவும் அற்பமான அரசியல் விளையாட்டு.  தேர்தல் பிரச்சாரத்தின் போது பெங்களூருவில் குறிப்பாக கோலாரில் பேசிய ஒரு பேச்சுக்காக குஜராத்தில் தனி நபர் ஒருவர் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.  அந்த வழக்கின் விசாரணையில் அரசு தலையீடு செய்கிறது.  வழக்கை விசாரித்த நீதிபதியை மாற்றி விட்டு ஆர்எஸ்எஸ் மனநிலை கொண்ட நீதிபதியை அமர வைத்து அவர் மூலமாக இரண்டு ஆண்டு சிறை தண்டனையை ராகுல் காந்திக்கு வழங்க வைத்திருக்கிறார்கள்.  இது திட்டமிட்ட அரசியல் சதி . எதிர்க்கட்சியை இல்லை என்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும்.  எதிர்க்கட்சிகள் இல்லாமல் எதிர் வரும் தேர்தலை சந்திக்க வேண்டும் என்கிற திட்டத்தோடு பாஜக செயல்படுகிறது என்று ஆவேசப்பட்டுள்ளார்.

 கடந்த பத்தாண்டு காலத்தில் பாஜக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றவில்லை . சாதியின் பெயரால்,  மதத்தின் பெயரால் பிரிக்க நினைத்தார்கள்.  பொருளாதாரத்தில் மிகவும் மோசமான அளவிலேயே சரிய வைத்திருக்கின்றார்கள்.  அதானி என்கிற ஒரு நபரை உலக பணக்காரர் ஆக்குவதற்காக பிரதமர் மோடி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார். 

இந்த நிலையில் தேர்தலை எதிர்கொள்வதற்கு அஞ்சும் பாஜக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சிதைக்க வேண்டும் . காங்கிரசை பலவீனப்படுத்த வேண்டும் என்கிற கணக்குகளோடு இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.  இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.  இது சர்வாதிகாரத்தின் உச்சம் . பாஜகவை மக்கள் புரிந்து கொள்வார்கள்.  தேர்தல் நேரத்தில் உரிய பாடத்தை புகட்டுவார்கள் என்று கூறியிருக்கும் திருமா,

 நீதித்துறையில் எல்லா காலகட்டத்திலும் பாஜக தலையிட்டு இருக்கிறது . ஒவ்வொரு பிரச்சனையிலும் நீதித்துறையில் தலையிடுகிறார்கள்.  அவர்கள் எதையும் செய்ய தயார் என்கிற நிலையில் தான் இருக்கிறார்கள்.  அதனால் எந்த அரசியல் அறத்தையும் அவர்கள் பின்பற்ற தயாராக இல்லை என்று ஆவேசப்பட்டுள்ளார்.