அமைச்சர் பதவி பறிப்பில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை- முதல்வர் விஜய்

 
அமைச்சர் பதவி பறிப்பில்  சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை- முதல்வர் விஜய்

4 அமைச்சர்களின் பதவி பறிப்பில்  சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என முதலமைச்சர் விஜய் தடாலடியாக அறிவித்துள்ளார்.

தமிழக அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்களின் செங்கோட்டையன் தவிர்த்து மற்றவர்கள் அனைவருமே புதியவர்கள், அந்த வகையில்  அனுபவத்தின் அடிப்படையில் யாருக்கும் அமைச்சரவையில் முதல்வர் விஜய் இடம் கொடுக்கவில்லை, இருந்தாலும் கொடுக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்கிறார்களா.? என முதல்வர் விஜய் கொடுத்த வாய்ப்பை நழுவ விட்டிருக்கிறார்கள் நான்கு  அமைச்சர்கள். அதில் முதல் இடத்தில் இருப்பது சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, அமைச்சராக பொறுப்பேற்ற சில நாட்களிலே தன்னுடைய பெயர் பிளெக்ஸ் பலகையில் முதலில் ஏன் போடவில்லை என மேடையிலே நிகழ்ச்சி ஏற்பட்டர்களிடம் கோபத்தை காட்டி அமைச்சர்களுக்கு இடையில் கோஷ்டி மோதல் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி சர்ச்சையில் சிக்கினார். 

அடுத்து, ஒருவரை தொலைபேசியில் ஜெகதீஸ்வரி மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியானது. இதில் உச்சக்கட்டமாக தன்னை ஒரு பட்டதாரி என்று கூறிக்கொண்ட ஜெகதீஸ்வரியின் சட்டசபை உரையின் போது அவர் பேசிய தமிழ், இவர் உண்மையிலே பட்டதாரி தானா என்கிற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டது, அந்த வகையில் அமைச்சரவை மாற்றத்தில் தன்னுடைய அமைச்சர் பதவியை பறிகொடுப்பதில் முதல் இடத்தில் இருக்கிறார் ஜெகதீஸ்வரி. அதே போன்று பல அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், புதியதாக மாற்றம் செய்ய பட இருக்கும் அமைச்சரவையில் இடம் பெறுவதற்கான முயற்சிகளில் பல ரசிகர்மன்ற காலத்தில் இருந்து தற்பொழுது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்கள் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.