பாபு உபி கிடையாது; காரணத்தை கடிதத்தில் ஏன் குறிப்பிடவில்லை? - காயத்ரி கேள்வி
எனது புகைப்படத்தை மார்பிங் செய்து பகிர்ந்தவர் ஒரு தமிழக பாஜக மாவட்ட பொறுப்பாளர் என்பது தெளிவாகிறது. ஆனால் பாபுவை வெறும் உபி என்று சொல்லி வார்ரூம் திசை திருப்ப முயன்றனர். மேலும் மாநில துணைத் தலைவர், பாபு எந்த ஒரு கட்சி நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்றார். பாபுவை ஏன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்ற காரணத்தை கடிதத்தில் ஏன் குறிப்பிடவில்லை? குறிப்பிட்டு இருந்தால், இது மாதிரி தவறுகளை எந்த ஒரு பெண் மீதும் செய்யக்கூடாது என்பதற்கு இது ஒரு முன்மாதிரியாக இருக்கும் அல்லவா? என்கிறார் பாஜகவில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம்.
இன்று கஸ்தூரி மேடம் பாபு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்று அதிகாரப்பூர்வ கடிதம் பகிர்ந்துள்ளார் . பாபுவின் ட்விட்டர் வரலாறு பார்க்கும் போது மாநிலத் தலைவரை பின்பற்றும் தீவிர ரசிகர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதைச் செய்ய அவர் தூண்டப்பட்டாரா? வேறு எந்த பெண்களுக்கும் இது நடக்கக்கூடாது என்கிறார் அவர்.
இந்த விவகாரம் அவர் மேலும், ஒரு கூட்டத்தில் 150 பேர் முன்னிலையில் நீங்கள் என்னைப் பற்றி பொய்யான செய்திகளைப் பரப்ப செய்தீர்கள் இதைத்தான் இப்போது வார்ரூம் என்னைத் தாக்க அதே காரணத்தை எடுத்துக்கொள்கிறது. கூட்டத்தில் என்னைப் பற்றி நீங்கள் வதந்திகளைப் பரப்பினீர்கள் என்றால் நான் கட்சியில் வளர்ந்து வருகிறேன் என்று அர்த்தம். இதே தானா என் செயல்பாடுகள் உங்களுக்கு எரிச்சலை கொடுத்து இருந்ததால தானா நான் ராஜினாமா செய்தேன் என்று சொன்னதும் அவசரமாக என்னை கட்சியில் இருந்து நீக்குனீங்க? என்று கேட்கிறார்.