ஓட்டு போட போற பொண்ணே... கனீர் குரலில் சீமான் பாடிய பாட்டு
மலையூர் மம்பட்டியான் படத்தில் இடம்பெற்றுள்ள ‘காட்டுவழி போற பொண்ணே கலங்கி நிக்காத..’என்ற பாடலை தேர்தல் பிரச்சாரத்தில் வரிகளை மாற்றி போட்டு பாடினார் சீமான்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா நவநீதன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்து வருகிறார்.
பிரச்சாரத்தின் போது சீமான் ஆவேசமாக பேசுவார் என்றுதான் எல்லோருக்கும் தெரியும் . அவர் அழகாகவும் பாடுவார் என்பதை பிரச்சாரத்தில் காட்டி வருகிறார். சீமான் நல்ல கதைசொல்லி என்று அவருடன் பழகிய திரை நட்சத்திரங்கள் சொல்லி வருகிறார்கள். அவர் கதை சொல்லும்போதே அவராகவே பாடல் எழுதி பாடி காட்டுவார் என்று அவருடன் பழகிய திரை பிரபலங்கள் சொல்லிவருகிறார்கள். தமிழ் திரைப்பாடல்கள் குறித்தும் மேடைகளில் நீண்ட சிறப்புரை ஆற்றி இருக்கிறார் சீமான்.
பாடல்களின் மீது அதிக ஆர்வம் கொண்ட சீமான் பிரச்சாரத்தில் பாட்டுப்பாடி அசத்தி வருகிறார்.
’’ஓட்டு போட போற பொண்ணே ஒதுங்கி நிக்காத..
கண்ட கண்ட சின்னங்கண்டு கலங்கி நிக்காத..
உழைக்கும் மக்கள் சின்னம் அது விவசாயி சின்னம்..
ஓட்டுப்போட போற அம்மா
ஓட்டுப்போட போற அக்கா
ஓட்டுப்போட போற அப்பா
ஒதுங்கி நிக்காத..
கண்ட கண்ட சின்னங்கண்டு கலங்கி நிக்காத..
உழைக்கும் மக்கள் சின்னம் அது விவசாயி சின்னம்..
நாள்தோறும் பாடுபட்டோம் ஆனாலும் கஷ்டப்பட்டோம்
நாள்தோறும் பாடுபட்டோம் ஆனாலும் துன்பப்பட்டோம்
யார் யாருக்கோ ஓட்ட போட்டோம்
ஓட்டாண்டி ஆகிபுட்டோம்
இந்த நெல மாற நான் வேற என்ன கூற-ஏ
இந்த நெல மாற நான் வேற என்ன கூற’’என்று ஈரோடு பிரச்சாரத்தில் அமைதியாக பாடியவர்,
’’உளவு இல்லை என்றால் உணவு இல்லை! உணவு இல்லை என்றால் உயிர்கள் இல்லை! உயிர்கள் இல்லை என்றால் உலகம் இல்லை! உழவை மீட்போம்!! உலகை காப்போம்!!நமது சின்னம் விவசாயி’’என்று பேசி ஆவேசமானார்.
ஓட்டு போட போற பொண்ணே ஒதுங்கி நிக்காத..
— சீமான் (@SeemanOfficial) February 14, 2023
கண்ட கண்ட சின்னங்கண்டு கலங்கி நிக்காத..
உழைக்கும் மக்கள் சின்னம் அது விவசாயி சின்னம்.. #ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு pic.twitter.com/CPVScmm3dI