பஞ்சாபை தொடர்ந்து ராஜஸ்தான் அரசும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதிய மதோசாக்கள் அறிமுகம்

 

பஞ்சாபை தொடர்ந்து ராஜஸ்தான் அரசும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதிய மதோசாக்கள் அறிமுகம்

பஞ்சாபை தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ராஜஸ்தானிலும் அம்மாநில அரசு மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதிய மதோசாக்கள் அறிமுகம் செய்துள்ளது.

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் இந்த வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தவிர்க்க தேவையான சட்டங்களை சட்டப்பேரவையில் நிறைவேற்றும்படி அந்த கட்சியின் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் முதல்வர்களுக்கு அறிவுறுத்தினார்.

பஞ்சாபை தொடர்ந்து ராஜஸ்தான் அரசும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதிய மதோசாக்கள் அறிமுகம்
முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்

இதனையடுத்து காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் பஞ்சாபில் கடந்த மாத தொடக்கத்தில் அம்மாநில சட்டப்பேரவையில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேறியது. மேலும், முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 4 மசோதாக்களையும் ஒருமனதாக நிறைவேற்றியது. பஞ்சாபை தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ராஜஸ்தானிலும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

பஞ்சாபை தொடர்ந்து ராஜஸ்தான் அரசும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதிய மதோசாக்கள் அறிமுகம்
முதல்வர் அசோக் கெலாட்

எதிர்பார்த்தது போலவே ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தவிர்க்க, அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று 3 மசோதாக்களை தாக்கல் செய்தது. அம்மாநில சட்டப்பேரவையில் ராஜஸ்தான் நாடாளுமன்ற விவகார அமைச்சர் சாந்தி தரிவால் நேற்று அத்தியாவசிய பொருட்கள் (சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் ராஜஸ்தான் திருத்தம்) மசோதா 2020, விவசாயிகள் ( அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் (ராஜஸ்தான் திருத்தம்) மசோதா 2020 மற்றும் விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி மற்றும் ராஜஸ்தான் திருத்தம்) மசோதா 2020 ஆகிய மசோதாக்களை அறிமுகம் செய்தார்.