பழைய சட்டங்களுடன் புதிய நூற்றாண்டை நாம் உருவாக்க முடியாது.. விவசாயிகளுக்கு மறைமுகமாக செய்தி சொன்ன மோடி

பழைய சட்டங்களுடன் புதிய நூற்றாண்டை நாம் உருவாக்க முடியாது.. விவசாயிகளுக்கு மறைமுகமாக செய்தி சொன்ன மோடி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் வேளையில், பழைய சட்டங்களுடன் புதிய நூற்றாண்டை நாம் உருவாக்க முடியாது என்று பிரதமர் மோடி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ரா மெட்ரோ ரயில் திட்ட கட்டுமான பணியை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது: வளர்ச்சிக்கு சீர்திருத்தங்கள் அவசியம். ஒரு புதிய ஒழுங்கு மற்றும் புதிய வசதிகளை வழங்க சீர்திருத்தங்கள் மிகவும் தேவை. முந்தைய நூற்றாண்டின் சட்டங்களுடன் அடுத்த நூற்றாண்டை நாம் உருவாக்க முடியாது.

பழைய சட்டங்களுடன் புதிய நூற்றாண்டை நாம் உருவாக்க முடியாது.. விவசாயிகளுக்கு மறைமுகமாக செய்தி சொன்ன மோடி
விவசாய பணி

கடந்த நூற்றாண்டில் நல்லதாக இருந்த சில சட்டங்கள் தற்போதைய நூற்றாண்டில் சுமையாகி விட்டன. சீர்திருத்தங்கள் தொடர்ச்சியான செயல்முறையாக இருக்க வேண்டும். எனது அரசு முழுமையான சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. முன்பு சீர்திருத்தங்கள் ஒரு துல்லியமான முறையில் அல்லது குறிப்பிட்ட செக்டார்கள் மற்றும் துறைகளை மனதில் வைத்து மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பழைய சட்டங்களுடன் புதிய நூற்றாண்டை நாம் உருவாக்க முடியாது.. விவசாயிகளுக்கு மறைமுகமாக செய்தி சொன்ன மோடி
விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்தும் அதனை ரத்து செய்யக்கோரியும் விவசாயிகள் தீவிரமாக போராடி வருகின்றனர். இன்று நாடு தழுவிய முழு அடைப்புக்கும் விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த சூழ்நிலையில், முந்தைய நூற்றாண்டின் சட்டங்களுடன் அடுத்த நூற்றாண்டை நாம் உருவாக்க முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்தது, புதிய வேளாண் சட்டத்தின் அவசியத்தை விவசாயிகளுக்கு மறைமுகமாக அவர் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.