இதுவரை தமிழகம் பார்த்திராத மிகவும் காஸ்ட்லியான இடைத்தேர்தல்!

 
க்

 ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி மக்களாட்சியை படுகுழிக்குள் தள்ளப் போகிறது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் என்று பலரும் ஆவேசப்பட்டு வருகின்றனர் .  திருமங்கலம் இடைத்தேர்தல் ஃபார்முலாவை மிஞ்சி விட்டது ஈரோடு இடைத்தேர்தல் ஃபார்முலா என்றும் பலரும் வெளிப்படையாக பேசி வரும் நிலையில், ஊடகங்களில் இது குறித்த தகவல் வெளிவந்தும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது என்று கவலையுடன் தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ச்

திமுக, அதிமுக இரண்டு கட்சியியும் போட்டி போட்டுக்கொண்டு  பரிசு பொருட்கள் மற்றும் பணம் பட்டுவாடாக்களை செய்து வருகிறது.  மக்களிடம் பணமும் பரிசு பொருட்களும் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அப்படியும் அவர் எதிரணிக்கு மனம் மாறி வாக்குகள் அளித்து விடக்கூடாது என்பதற்காக ஆடுகளை அடைத்து வைப்பது மாதிரி மனித பட்டியில் மக்களை அடைத்து வைத்து தலைக்கு 500 ரூபாய்,  சாப்பாடு கொடுக்கும் புதிய ஃபார்முலாவை கண்டுபிடித்திருக்கிறது திமுக.   இதைத்தான் அதிமுக கடுமையாக விமர்சித்து வருகிறது.   சீமானும் கடுமையாக விமர்சித்து வருகிறார் .    மக்களை ஒரு இடத்தில் அடைத்து வைத்து சாப்பாடு போட்டு பணம் கொடுத்து புது சினிமாக்களையும் காட்டுகிறார்கள். 

ச

 எவர்சில்வர் குடம், சேலைகள், கொலுசு, குக்கர், எவர்சில்வர் தட்டு, சில்வர் டம்ளர், உள்ளிட்டவைகளை வழங்குகிறார்கள்.    பிரபல துணிக்கடையில் வேட்டி சட்டை சேலை அடங்கிய கிப்ட் பேக்கையும் வீடு வீடாக வழங்கி வருகிறார்கள்.   அதுமட்டுமல்லாமல் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கும் திட்டத்தையும் கையில் எடுத்திருக்கிறார்கள். வயதுக்குட்பட்ட இளையோருக்கு ஸ்மார்ட் வாட்ச்சும் 35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் லெதர் வாட்ச்,  தங்க நிற செயின் வாட்சுகளையும் வாரி வழங்கியிருக்கிறார்கள்.

 இந்த பரிசுகள் மட்டுமல்லாத பண பட்டுவாடாவும் நடக்கிறது.  இடைத்தேர்தல் நடக்கும் கிழக்கு தொகுதி முழுவதும் பிரபல துணிக்கடைகளின் கூப்பன்களை ஆளுங்கட்சி வழங்கி இருக்கிறது என்கிறார்கள்.   1200 ரூபாய் மதிப்புள்ள இந்த கூப்பன்களை கொடுத்து சீக்கிரம் கடையில் சென்று வாங்கிக் கொள்ளுங்கள்  என்று சொல்லிக் கொள்கிறார்களாம்.

ச்ம்

 குறுமிளகு ,கிராம்பு, பட்டை, ஏலக்காய், டீ வர்க்கிகளையும் பாக்கெட்டில் அடக்கி வைத்து மக்களுக்கு கொடுத்து வருகின்றார்கள்.  திமுகவின் பணப்பட்டுவாடாவையும் வித்தியாசமான பரிசு பொருட்களையும் பார்த்து அதிமுக ஸ்தம்பித்து போய் தான் இருக்கிறது என்கிறார்கள்.  

 இந்த இடைத்தேர்தலில் சில குடும்பங்கள் தங்களின் சிறு , குறு கடன்களை அடைத்து விட்டதாக சொல்கிறார்கள் அப்பகுதியினர்.   பணப்பட்டுவாடாவுக்காக ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் கோடிகளை இறக்கி இருப்பதால்,  தமிழகம் பார்த்திராத மிகவும் காஸ்ட்லியான இடைத்தேர்தல் இதுதான் என்கிறார்கள் .  ஆளுங்கட்சி 350 கோடிக்கு மேல் இறக்கி இருப்பதாகவும் எதிர்க்கட்சி 150 கோடிக்கு மேல் பணத்தை வாரி இறக்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.  

எ

 ஒரு வீட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட வாக்குகள் இருந்தால் சர்ப்ரைஸ் கிப்ட் களை வழங்கி கொண்டிருக்கிறார்கள்.   ஆளுங்கட்சி தரப்பில் ஒரு கிராம் தங்க காசு வழங்க ஏற்பாடு நடக்கிறது என்கிறார்கள்.   எதிர்க்கட்சி தரப்பில் குத்துவிளக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டு இருக்கிறதாம்.  இது மட்டுமல்லாமல் ஏர் பார்ட்ஸ், எலக்ட்ரிக் ஸ்டவ், ஜூஸ் மிக்சர், லெதர் ஹேண்ட்பேக்,  விளையாட்டு உள்ளிட்ட ஏராளமான கிப்ட் களையும் வாரி வழங்கி வருகிறார்கள். 

 இதையெல்லாம் தடுக்க வேண்டிய பறக்கும் படை படுத்து தூங்குகிறதா என்ற கேள்வியை  எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.