நாதக நிர்வாகிக்கு மைக் தர மறுத்த அமைச்சர்! அதிருப்தியில் வெளியேறிய பொதுமக்கள்

 
nட்க்

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிக்கு மைக் தர மறுத்த அமைச்சர், அவரை கூட்டத்தை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டதை அடுத்து போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து வெளியேற்றியதால் அதிருப்தி அடைந்த பொதுமக்களும் பலர் அங்கிருந்து வெளியேறினர்.  இதனால் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு பதற்றமும் ஏற்பட்டது .

மே தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழகம் எங்கிலும் கிராம சபை கூட்டம் நடந்தது .  கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் அருவிக்கரை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.   தமிழகத் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

மனோ

 அப்போது நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி,  முன்னாள் பத்மநாபபுரம் தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருமான சீலன் என்பவர் கேள்வி எழுப்பினார். கேரளாவிற்கு கனிம வளங்கள்  அதிக அளவில் கடத்தப்படுகிறது.   இப்படி கடத்தும் அளவுக்கு குவாரிகளுக்கு ஏன் அனுமதி வழங்கப்படுகிறது? என்று அவர் கேள்வி எழுப்பினார் சீலன்.

 சீலன் எழுப்பிய கேள்வியில் ஆத்திரம் அடைந்த அமைச்சர் மனோ தங்கராஜ்,    நீதான் கல்குவாரி நடத்துபவர்களிடம் கமிஷன் வாங்கிக்கொண்டு தடுக்கிறாய். அருவிக்கரை கிராம சபா கூட்டத்தில் பேசுவதற்கு நீ யார்?  அருவிக்கரை ஊராட்சியில் இருப்பவர்கள் மட்டும்தான் கேள்வி கேட்க வேண்டும் என்று ஆவேசட்டார்.

 அதற்கு அந்த இளைஞர்,  பதில் தர மைக் கேட்ட,  அதற்கு அமைச்சர் மைக் தர மறுக்கவும்,  கேள்வி கேட்ட உங்களுக்கு பதில் சொல்ல வேண்டும் அதனால் மைக்கை என்னிடம் தாருங்கள் என்று சீலன் கேட்க,  அமைச்சர் மைக் தர மறுத்துவிட்டார் .  இதனால் அங்கு பரபரப்பும் பதட்டமும் இருந்தது .  உடனே தக்கலை காவல்துறை கண்காணிப்பாளர் உதயசூரியன் தலைமையிலான போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து வெளியேற்றினர் . இதில் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

 தங்களுக்காக கேள்வி கேட்ட இளைஞரை அமைச்சர் வெளியேற்றி விட்டதால்,  கூட்டத்தில் இருந்த  பெண்கள் , மூதாட்டிகள்  பலரும் கிராம சபா கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். இதனால் அங்கே பரபரப்பும் பதற்றமும் நிலவியது.