சகோதரி தேர்தலில் போட்டி.. பஞ்சாப் ஐகான் நடிகர் சோனு சூட் நியமனத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்..

 
சீன படையினரை வீட்டுக்கு அனுப்ப லடாக்குக்கு நடிகர் சோனு சூட்டை அனுப்புங்க….. ஆகர் படேல்

இந்திய  தேர்தல் ஆணையம், பஞ்சாப் மாநில ஐகானாக நியமிக்கப்பட்ட நடிகர் சோனு சூட் நியமனத்தை ரத்து செய்தது.

கொரோனா காலத்தில் நடிகர் சோனு சூட் செய்த மனிதாபினமா பணி சமூகத்தின் அனைத்து பிரிவினரால் வெகுவாகப்பட்டது. பஞ்சாப் மாநில தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் இந்திய  தேர்தல் ஆணையம்  ஒரு ஆண்டுக்கு முன்பு பிரபல நடிகர் சோனு சூட்டை பஞ்சாபின் அடையாள சின்னமாக ( ஐகான்) நியமனம் செய்தது. நேர்மையாக வாக்களிப்பது தொடர்பாக பஞ்சாப் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த சோனு சூட் அம்மாநிலத்தின் அடையாள சின்னமாக நியமிக்கப்பட்டார். 

தேர்தல் ஆணையம்

இந்நிலையில் சோனு சூட்டின் நியமனத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக பஞ்சாபின்  தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.கருணா ராஜூ நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 4ம் தேதியன்று, பஞ்சாப் மாநில ஐகானாக சோனு சூட் நியமிக்கப்பட்டதை ரத்து செய்தது என தெரிவித்தார். தற்போது தனது குடும்ப உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவதால், பஞ்சாப் ஐகான் பொறுப்பிலிருந்து விலகுவதாக தேர்தல் ஆணையத்திடம் சோனு சூட் கூறியதாகவும், அதன் பிறகுதான் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கை எடுத்ததாகவும் தகவல்.

சகோதரி மால்விகாவுடன் சோனு சூட்

திரைப்படங்களில் வில்லனாக தோன்றினாலும் ரியல் லைப்பில் ஹீரோவாக வலம் வருபவர் பிரபல நடிகர் சோனு சூட். கொரோனா வைரஸின் முதல் அலையின்போது நெருக்கடியில் சிக்கி தவித்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவி செய்தார். இது தவிர குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு பணம், விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது போன்ற பல உதவிகளை சோனு சூட் செய்து வருகிறார். சோனு சூட் கடந்த நவம்பர் மாதம், தனது சகோதரி மால்விகா சச்சார் எதிர்வரும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்து இருந்தார்.