சிலுவம் பாளையத்தான் செவுல்ல அறையுறாப்ள.. சண்டாளப் பயலுக்கு சாட்டையடி கொடுக்கணும்...

 
எ

வரும் 24ம் தேதி அன்று திருச்சியில் மாநாடு நடத்துகிறார் ஓ.பன்னீர்செல்வம்.   அதிமுகவை எடப்பாடிபழனிச்சாமி கைப்பற்றிவிட்டதால் தனது பக்கம் தொண்டர்களை இழுக்க,  தனது ஆதரவை பலப்படுத்த இந்த மாநாட்டை அவர் நடத்துகிறார்.  தமிழகம் முழுவதிலும் உள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இந்த மாநாட்டிற்காக திரண்டு வருகின்றனர்.

இந்த மாநாடு குறித்து ஓபிஎஸ் அணியில் இருக்கும் மருது அழகுராஜ்,  புதுக்கவிதை வடிவில் தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

ஒ

பங்காளிக்கு வணக்கம..
வண்டி வாகனங்களுக்கு சொல்லியாச்சா..
அங்காளி பங்காளி அத்தனை பேரும் வந்திடனும்.
கட்டுச் சோறு கட்டிப்போம்.

கழகத்தை
காப்பது
கடமை என்பதை
லட்சியமா
வச்சுப்போம்..

நம்மள யாருன்னு கேட்ட
சிலுவம்
பாளையத்தான் செவுல்ல அறையுறாப்ள
திருச்சியே 
திக்கு
முக்ககாடிப்போகனும்..

கண்ணுக்குள் அடக்க முடியாத கடல் போல
காவிரிக் கரையே ஓ.பி.எஸ் என்னும் மூன்றெழுத்து மந்திரச் சொல்லால்  கடற்கரையா மாறனும்.
தொண்டன் நெனச்சா டங்குவாரை அத்துப்புடுவானுகங்கிறது
டெண்டர்கள் கும்பலுக்கு தெளிவா புரியனும்.

அம்மா காட்டுன அடையாளம் ஓ.பி.எஸ் ஒருவர் தான் என்பதை உலகுக்கு உணர்த்தனும்.
புரட்சித் தலைவரது தொண்டன் காசுக்கு விலை
போகாத கட்டித் தங்கம்ங்கிறத பொன்னி
நதிக்கரை புரட்சி 
அபகரிப்பு கும்பலின்
அறிவுக்கு
உரைக்கனும்..

அம்மா எங்கள்
உலகம் அவர் அடையாளம் காட்டிய அண்ணன் ஓ.பி.எஸ் தான் எங்கள் கழகம் என்பதை
திருச்சி மாநாடு தீர்ப்பாக எழுதனும்.

ட்

சத்யாவின்
பிள்ளையும்
சந்தியாவின்
பிள்ளையும்
கட்டிக் காத்த
சமத்துவ
இயக்கத்தை
சமூக நீதிக்கு
சாட்சி சொல்லும்
இமயத்தை
ஒரு சாதிச் சங்கமாக்க
சதி செய்யும்
எடப்பாடி
என்னும்
சண்டாளப் பயலுக்கு
சாட்டையடி
கொடுக்கனும்

இவனுக
ஒன்னுகூட
மாட்டானுகன்னு
நம்மள
இளக்காரமா
நெனக்கிற
பயலுகளுக்கு
நம்ம ஒற்றுமைய
பார்த்து
ஒன்னுக்கு
போகனும்..

தெற்கு வடக்கு
டெல்டா 
டால்டான்னு
நம்மள பிரிச்சு
வச்சு
பார்க்குற
நரி சூழ்ச்சி
மடப்பாடிக்கு
சுளுக்கு
எடுக்கனும்.

துரோகத்துக்கு
துணைபோகும்
எடுபிடி கும்பலுக்கு
தூக்கந்
தொலையனும்..

உறையூர்
சோழனும்
பெரும்பிடுகு
பேரரசனும்
வீரன்
அழகு
முத்துக் கோனும்
வெற்றி மங்கை
வேலுநாச்சியும்
தீரன் சின்னமலையும்
கட்டப் பொம்முவும்
பாயும் புலி
பண்டார வன்னியனும்
மாமன்னர்கள்
மருதிருவரும்
ஒண்டி வீரனும்
வாளுக்கு வேலியும்
வள்ளலாரும்
பெருந்தலைவர்
காமராசரும்
பசும் பொன்
தேவரும்
வீரன் சுந்தரலிங்கமும்
கப்பலோட்டிய
தமிழனும்
ஆசுகவி 
பாரதியும் 
அப்துல் கலாம்
ஐயாவும்..
வள்ளல்
அழகப்பரும்
இமானுவேல்
சேகரனும்
கொடிகாத்த
குமரனும்
சிங்கார
வேலரும்..
உசிலை தந்த
உறங்காப் புலி
மூக்கையா தேவரும்
கண்ணியமே
வடிவான
காயிதே மில்லத்தும்
கார்டு வெல்லும்
தந்தை பெரியாரும்
பேரறிஞர்
அண்ணாவும் 
காஞ்சித் தலைவனும்
அறிவுப் பொக்கிஷம்
முத்துலெட்சுமி ரெட்டியும்..
புரட்சித் தலைவரும்
புரட்சித் தலைவியும்
இன்னும்
இன்னுமாக
நமக்கு 
வழிகாட்டிய
தலைவர்களது 
பாதத்து
தடத்தில்
எதிர்கால
அரசியலை
வாகை சூழ
முன்னெடுக்க
முக்கொம்பு
கரைக்கு
முன்பாகவே
வந்து சேரு
பங்காளி..

ம்

அக்கா தங்கச்சியையும்
அன்போடு
அழைத்து வா...
அக்கம்
பக்கத்து
உறவுகளை
அணுசரித்து
கூட்டி வா..

பொன்மலை
கூட்டத்தை
கும்பமேளா
கூட்டத்தோடு
ஒப்பிட்டு
உலகமே
உயர்வாக பேசனும்..

சித்திரைத்
திருவிழாவுக்கு
திருச்சியிலே
நாம ஒத்திகை
பார்க்கனும்.
மறக்காம
வந்திடு
பங்காளி...

இது
நம்ம
மானத்துக்கும்
ரோசத்துக்கும்
வந்திருக்கும்
சவால்
என்பதை
மறக்காதே
பங்காளி..

ஆர்ப்பரித்து
வா
அபகரிப்பு
என்னும்
அக்கிரமத்தை
தகர்க்க..
அணிதிரட்டி
வா.
பாசமுள்ள
சொந்தங்களே
படைதிரட்டி
வா..

மாமன் மச்சான்களே
மறக்காம
வந்திடுங்க
மஞ்சுவிரட்டு
மாடு பிடி
வீரர்களே
திரளாக
வந்திடுங்க...
ஜல்லிக்கட்டு
உரிமை மீட்ட
சாதனைத்
தலைவனுக்கு
நன்றி சொல்ல
வந்திடுங்க..
.
ஒப்பில்லா தாய் தந்த
தப்பில்லா தங்க மகன்
ஓ.பி.எஸ்
அழைக்கிறார்.
விழி நிறைய
ஆவலோடு
உங்களை
வழி நின்று
வணங்கி வரவேற்க
காத்திருக்கும்
உங்கள்
பாசமுள்ள 
பங்காளி...