வேறுவழியில்லை…. சோனியா காந்தி பதவி காலத்தை நீட்டிக்கும் நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி…

 

வேறுவழியில்லை…. சோனியா காந்தி பதவி காலத்தை நீட்டிக்கும் நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி…

நம் நாட்டின் பழம் பெரும்கட்சியான காங்கிரஸ் தற்போது ஒரு முழு நேர தலைவர் இல்லாமல் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதர காங்கிரஸ் தலைவர்கள் வற்புறுத்தியும் அவர் தலைவர் பதவியை ஏற்க மறுத்து விட்டார்.

வேறுவழியில்லை…. சோனியா காந்தி பதவி காலத்தை நீட்டிக்கும் நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி…

இதனையடுத்து, புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை கட்சியின் இடைக்கால தலைவராக இருக்கும்படி, காங்கிரஸ் காரிய கமிட்டி குழு கேட்டு கொண்டதால் சோனியா காந்தி இடைக்கால தலைவராக 2019 ஆகஸ்ட் 9ம் தேதியன்று பொறுப்பேற்று கொண்டார். அடுத்த மாதம் 9ம் தேதி வந்தால் சோனியா காந்தி இடைக்கால தலைவராக பொறுப்பேற்று ஓராண்டு காலம் ஆகப்போகிறது. ஆனால் இன்னும் காங்கிரஸ் கட்சி முழு நேர தலைவரை தேர்ந்தெடுக்கவில்லை. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நடைமுறைப்படுத்த லாக்டவுனால் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது தள்ளிபோகிறது என அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

வேறுவழியில்லை…. சோனியா காந்தி பதவி காலத்தை நீட்டிக்கும் நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி…

இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டி விரைவில் கூடி, சோனியா காந்தியின் இடைக்கால தலைவர் பதவி காலத்தை நீட்டிக்கும் முடிவை எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறுகையில், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படாததால், கட்சி அரசியலமைப்பின் படி, இந்த நீட்டிப்பு தொழில்நுட்ப தேவையாக இருக்கும். மேலும், கட்சி தனது முடிவை ஒரு முன்நிபந்தனை நிலையாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார். 2 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது நிலுவையில் இருந்தால், இடைக்கால தலைவரை நியமனம் செய்ய காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு காங்கிரஸ் அரசியலமைப்பு அதிகாரம் அளிக்கிறது.