கேப்டன் அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்த காங்கிரஸ்.. பதிலடி கொடுத்த பிரனீத் கவுர்

 
பிரனீத் கவுர்

கட்சி விரோத நடவடிக்கைகள் ஈடுபட்டதாக கூறி பஞ்சாபின் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுரை கட்சியிலிருந்து காங்கிரஸ் சஸ்பெண்ட் செய்துள்ளது.

பஞ்சாபின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸிலிருந்து பா.ஜ.க.வுக்கு மாறியவருமான  கேப்டன் அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர். கணவர் பா.ஜ.க.வுக்கு தாவினாலும், பிரனீத் கவுர் தொடர்ந்து காங்கிரஸில் இருந்து வருகிறார். இந்நிலையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக  பாட்டியாலா எம்.பி.யும், முன்னாள் வெளியுறவுத்துறை இணையமைச்சருமான பிரனீத் கவுரை காங்கிரஸ் சஸ்பெண்ட் செய்தது. மேலும் கட்சி  விரோத நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி காங்கிரஸ் தலைமை நோட்டீஸ் அனுப்பியது. இது பிரனீத் கவுருக்கு கடும் கோபத்தை கிளப்பியுள்ளது. இதனையடுத்து பிரனீத் கவுர் அகில இந்திய காங்கிரஸின் ஒழுங்கு நடவடிக்கை குழு செயலாளர் தாரிக் அன்வருக்கு  காட்டமாக கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பிரனீத் கவுர் கூறியிருப்பதாவது:

கேப்டன் அமரீந்தர் சிங்

ஆரம்பத்தில் 1999ம் ஆண்டில் சோனியா காந்தி வெளிநாட்டு பிரஜை என்ற பிரச்சினையில் காங்கிரஸிலில் இருந்து வெளியேறி 2019 வரை 20 ஆண்டுகள் வெளியில் இருந்தவர், அவர் ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்கொண்டவர் இப்போது என்னை ஒழுங்கு விஷயமாக விசாரிக்கிறார் என்பதை பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன். என் மீது குற்றச்சாட்டுகளை கூறிய பஞ்சாப் காங்கிரஸ்காரர்கள் தங்களுக்கு எதிராக பல பிரச்சினைகள் நிலுவையில் உள்ளவர்கள். அப்போது முதல்வராக இருந்த எனது கணவருக்கு போன் செய்தால், அவர்கள் செய்த செயல்கள் குறித்த விவரங்களை தெரிவிப்பார். சொந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை பாதுகாத்தார். இருப்பினும், நீங்கள் இதை செய்ய மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். 

காங்கிரஸ்

உங்கள் விளக்க காரண அறிவிப்பின்படி,நான் எப்போதும் எனது தொகுதிகள், தொகுதி மற்றும் எனது மாநிலமான பஞ்சாப் ஆகியவற்றுக்கு ஆதரவாக நின்று, எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் அவர்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்தேன். எந்தவொரு மாநிலத்திலும் காங்கிரஸ் அரசாங்கத்தின் ஒவ்வொரு மாநில பிரச்சினைகளுக்கு தீர்வு காண, இந்த விஷயத்தில் பா.ஜ.க. அரசாங்கத்தின் மத்திய அரசின் அமைச்சரை சந்திக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன். இது கடந்த ஆட்சியில் பஞ்சாபில் செய்யப்பட்டது. இன்று சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். நானும், நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இது போன்ற பிரச்சினைகளை தீர்க்க மாநில மற்றும் மத்திய அரசை எப்போதும் சந்திப்பேன். என் மீது நடவடிக்கை எடுப்பது போல், நீங்கள் விரும்பும் எந்த நடவடிக்கையும் எடுக்க உங்களுக்கு சுதந்திரம் உள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.