நானும் கலைஞரும் திருட்டு தனமா வீட்டை விட்டு ஓடி...

 
க்க்

திருட்டு ரயில் ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை என்று நடிகை கஸ்தூரி சொன்னதற்கு திமுகவினர் கொதித்தெழுந்துள்ளனர்.  கஸ்தூரியின் பாட்டியை கலைஞருடன் ஒப்பிட்டு திமுக எம்பி

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவி வருகிறது.  இந்த நிலையில் திருப்பூர் சென்னை பகுதிகளில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் மொத்தமாக தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப ரயில் நிலையங்களை குவிந்தார்கள்.

mm

இந்த பதட்டமான சூழலில் முதல்வர் ஸ்டாலின்,  வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வதந்திகளை பரப்புகின்றவர்கள்.   இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள் .  நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பவர்கள் சமூக ஊடகங்களில் இப்படி கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்கு உரியது என்று எச்சரித்துள்ளார் . 

அதே நேரம்,    ’’வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு இது.   இதனை நம்மை விட வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து வாழும் மக்களை அழுத்தமாகச் சொல்வார்கள். வெளி மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளை பரப்புவார்கள் வேறு மாநிலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களின் வீடியோக்களை படங்களையும் தமிழ்நாட்டில் நடைபெற்றதாக வேண்டும் என்று வதந்தி பரப்பி அச்சத்தையும் பீதியையும் பரப்பினால் அவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .  பீகாரைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர் வேறு ஏதோ மாநிலத்தில் நடந்த சம்பவத்தினை  தமிழ்நாட்டில் நடந்ததை போல பரப்பியதுதான் இந்த பிரச்சனைக்கு தொடக்கமாக அமைந்திருக்கிறது.

 வடமாநிலத் தொழிலாளர் தோழர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம்.  அப்படி யாராவது உங்களை அச்சுறுத்தினால் காவல்துறையின் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  அதில் தகவல் தாருங்கள் .  இங்கு உள்ள அனைத்து மாநில தொழிலாளர்களுக்கும் அரணாக இந்த அரசும் தமிழ்நாட்டு மக்களும் இருப்பார்கள் என்பதை இங்கே இருக்கும் தொழிலாளர் சகோதரர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.   தவறான செய்திகளை அடிப்படையில் நீங்கள் எவரும் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம்’’ என்று வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கையும் தந்திருந்தார்.

இந்நிலையில்,   வடநாட்டவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்பதெல்லாம் மிகை .  இது வந்தோரை வாழவைக்கும்  தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர்  என யாராயிருந்தாலும்,   திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி.

mm

இதைப்படித்துவிட்டு, திமுகவை சீண்டுகிறார் கஸ்தூரி, குறிப்பாக கலைஞர் கருணாநிதியை சீண்டுகிறா கஸ்தூரி என்று அக்கட்சியினர் கொதித்தெழுந்துள்ளனர்.  

திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா, 
’’கலைஞர்  திருட்டு ரயிலில் தான் வந்தார்னு நீ சொன்னீன்னா… 
1. அதை அவரே எங்காவது பேசி எழுயிருக்க வேண்டும் - ஆனால் எந்த இடத்திலும் அவர் அப்படி பதிவு செய்யவில்லை.
2. சம்மந்தப்பட்ட டி டி ஆர் யாரேனும்  அவரை தான் பிடித்ததாக சொல்லியிருக்கணும்..எழுதி இருக்கணும் - ஆனால் எந்த ஒரு டி டி ஆரும் அப்படி பதிவு செய்யவில்லை.
மேலே சொன்ன ரெண்டு பாயிண்ட்டும் இல்லாம போனதால மூனாவதா ஒரே ஒரு ஆப்ஷன் தான் இருக்கு!!  
அது என்னன்னா கலைஞரோட உடன் வந்த உன்னோட பாட்டி உன்கிட்ட ‘’நானும் கலைஞரும் திருட்டு தனமா வீட்டை விட்டு ஓடி ரயிலேறி போனோம்னு’’ சொல்லியிருக்கணும்.’’என்று தனது வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.