டெண்டர் அதிமுகவா? தொண்டர் அதிமுகவா? அமித்ஷா தெளிவு படுத்தக்கோரும் ஓபிஎஸ் டீம்

 
o

அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என்று  அமித்ஷா அறிவித்திருக்கிறார்.  அதேபோல் இனிவரும் காலங்களில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று எடப்பாடி பழனிச்சாமியும் அறிவித்திருக்கிறார் .   இதற்கிடையில் ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்,   அமித்ஷா சொல்கிற அதிமுக கூட்டணி அபகரிப்பு பழனிச்சாமி பழனிச்சாமியின் டெண்டர் அண்ணா திமுக வா?  இல்லை எங்கள் ஓபிஎஸ் தலைமையிலான தொண்டர் அண்ணா திமுகவா? என்பதை தெளிவு படுத்தி விட்டால் சிறப்பாக இருக்கும் என்கிறார் .

e

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக பன்னீர் செல்வமும்,  இணை ஒருங்கிணைப்பாளராக பழனிச்சாமியும் இருந்தனர்.  கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில்,   2021 சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தது பாஜக.     இட பங்கீடு காரணமாக அதிமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டது.   ஆனாலும் கூட்டணி தொடருவதாக இரு கட்சித் தலைவர்களும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே வந்தனர் .

இந்த நிலையில் தான் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் உட்கட்சி மோதல் ஏற்பட்டு பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும்  பிரிந்து நிற்கிறார்கள்.  இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இருவருமே பாஜகவின் ஆதரவை கேட்கின்றார்கள்.   இதனால் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது.  பாஜக தலைமை மேற்கொண்ட முயற்சியின் காரணமாக பன்னீர்செல்வம் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.   பழனிச்சாமி தரப்புக்கு பாஜக ஆதரவளித்தது.

m

 அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது.   இந்த சூழலில் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார் அண்ணாமலை . அக்கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும் சொல்லி  வந்தார்.  ஆனால் அவரின் டெல்லி பயணத்திற்கு பின்னர் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.  அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்து போவதற்காக இணக்கமாக சென்று கொண்டிருக்கிறார் அண்ணாமலை.

 அமித்ஷாவும் நேற்று,  அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடர்கிறது என்று அறிவித்திருக்கிறார்.  பதிலுக்கு எடப்பாடி பழனிச்சாமியும் இனிவரும் காலங்களில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என்று அறிவித்திருக்கிறார்.

t

இதற்கிடையில்,  ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், தெளிவுதேவை. அமித்ஷா சொல்கிற அ.தி.மு.க.  கூட்டணி.. அபகரிப்பு பழனிச்சாமியின் டெண்டர் அண்ணா
திமுகவா..? இல்லை எங்கள் ஓ.பி.எஸ் தலைமையிலான தொண்டர் அண்ணா திமுகவா என்பதை தெளிவுபடுத்தி விட்டால் சிறப்பாக இருக்கும் என்கிறார்.

மேலும்,    ஆக்ரமிப்பு காஷ்மீரை அங்கீகரிப்பதும் அபகரிப்பு எடப்பாடியை ஆதரிப்பதும் ஒன்று தான் என்பதை தேசபக்தி பேசும் கட்சி உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் மருது.அழகுராஜ்.