மேற்கு வங்க பா.ஜ.க.வில் பிரசாந்த் கிஷோர் ஆட்கள்.. பா.ஜ.க. வெற்றி பெறுவது சாத்தியமற்றது.. ததாகதா ராய் எச்சரிக்கை
மேற்கு வங்க பா.ஜ.க.வில், திரிணாமுல் காங்கிரசுக்காக வேலை பார்க்க பிரசாந்த் கிஷோர் குழு ஆட்களை வைத்துள்ளது, இந்த மாநிலத்தில் பா.ஜ.க. வெற்றி பெறுவது சாத்தியமற்றது என்று ததாகதா ராய் எச்சரிக்கை செய்துள்ளார்.
திரிபுரா மற்றும் மேகாலயாவின் முன்னாள் கவர்னரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ததாகதா ராய் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், பா.ஜ.க. ஆதரவாளர் ஒருவர் என்னிடம் தனது பக்கத்து கிராமத்தை சேர்ந்த படித்த இளைஞரை பிரசாந்த் கிஷோர் டீம் அழைத்து பா.ஜ.க.வில் சேருமாறும், ஆனால் திரிணாமுல் காங்கிரசுக்காக வேலை செய்ய வேண்டும் இதற்காக மாதந்தோறும் ரூ.13 ஆயிரம் சம்பளம் தருவதாக வாக்குறுதி அளித்ததாக தெரிவித்தார்.

பிரசாந்த் கிஷோர் மூலம் பணிபுரியும் பல அடிமட்ட தொண்டர்கள் பா.ஜ.க.வில் உள்ளனர் என்று நான் நம்புகிறேன். இதுவரை எங்களால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை. மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. வெற்றி பெறுவது சாத்தியமற்றது என்று பதிவு செய்து இருந்தார். ஆனால் ததகதா ராயின் கருத்தை பா.ஜக. அலட்சியம் செய்துள்ளது. மேற்கு வங்க பா.ஜ.க.வின் துணை தலைவர் ஜாய் பிரகாஷ் மஜூம்தார் கூறியதாவது:

அவர் (ததாகதா ராய்) ஒரு செலவழித்த சக்தி, இனி அவர் பேச்சுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. தொடர்ந்து டிவிட் செய்யும் கலையில் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் பேச்சுக்கு கட்சி முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவர் கூற்றுக்கு எந்த அடிப்படையும் இல்லை. இந்த அறிக்கை பா.ஜ.க.வின் அடிமட்ட தொண்டர்களின் போராட்டத்தையும், தியாகத்தையும் அவமதிக்கும் செயலேயன்றி வேறில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


