டிசம்பர் 6 மிகவும் சிறப்பான நாள்... பரபரப்பை ஏற்படுத்திய பா.ஜ.க. மூத்த தலைவரின் டிவிட்

 
ததாகதா ராய் ததாகதா ராய்

டிசம்பர் 6 மிகவும் சிறப்பான நாள் என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ததாகதா ராய் நேற்று டிவிட் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992 டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது. இந்த தினத்தை கருப்பு தினமாக ஒரு பிரிவினர் கடைப்பிடிக்கின்றனர். இதனால் ஆண்டுதோறும் டிசம்பர் 6ம் தேதியன்று எந்தவித விரும்பதகாத சம்பவங்களும் நடந்து விடக் கூடாது என்பதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும். நேற்று டிசம்பர் 6 என்பதால் நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த சூழ்நிலையில், டிசம்பர் 6ம் தேதியை சிறப்பான நாள் என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ஒருவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அம்பேத்கர்

திரிபுரா மற்றும் மேகாலயாவின் முன்னாள் கவர்னரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ததாகதா ராய் நேற்று டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், இன்று டிசம்பர் 6, மிகவும் சிறப்பான நாள். முதலில், பாபா சாகேப் அம்பேத்கரின் நினைவுநாள். இதுவரை தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட மக்களுக்கு சுயமரியாதை கொடுத்தவர். பின்னர் நமது அரசியலமைப்பை உருவாக்கியது.

ராமர் கோயில் (மாதிரி படம்)

இரண்டாவதாக இந்த நாளில்தான் அடிமைத்தனத்தின் அடையாளமான அயோத்தியில் பிரபு ராமரின் பிறந்த இடத்தின் மீது துருக்கிய-ஆப்கானிய படையெடுப்பாளர் மிர் பாங்கி அமைத்த கட்டிடம்  (பாபர் மசூதி) தேசபக்தியுள்ள கூட்டத்தால் இடிக்கப்பட்டது. அங்கு ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது என்று பதிவு செய்து இருந்தார்.