விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தால் பாஜகவிற்கு பாதிப்பு இல்லை- தமிழிசை
![தமிழிசை](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded_original/34eaf73c5b09448fa4ee4f64f930ad25.gif)
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தால் பாஜகவிற்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை, பாஜக அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. தினமும் ஏதாவது ஒரு கட்சி நிர்வாகிகள் தலைவர்கள் தாக்கப்படுகிறார்கள் அல்லது கொலை செய்யப்படுகிறார்கள். கூலிப்படைகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அதற்கு ஒரு உதாரணம் ஆம்ஸ்ட்ராங் கொலை. புதிது புதிதாக குற்றவாளிகள் கைது செய்து கொண்டுள்ளார்கள், அதற்காக தான் சிபிஐ விசாரணை கேட்கின்றோம். குற்றம் நடக்கிறது, ஆனால் எதற்கும் சரியான குற்றவாளிகள் கண்டுபிடிக்காமல் உள்ளனர். இதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், எல்லாவற்றிலும் அரசியல் செய்யக்கூடாது
தனிப்பட்ட காரணங்களுக்காக கொலைகள் நடக்கிறது என்கிறார்கள்.. தனிப்பட்ட காரணங்கள் இருந்தால் கூட அரசியல் காரணங்களும்காகத்தான் பின்புலத்தை வைத்து தான் கொலைகள் நடைபெறுகிறது. தனி மனிதர்களுக்கு பாதுகாப்பில்லை, குடிமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு உள்ளது. தமிழகத்தில் இதுதான் மிகப்பெரிய கவலையாக உள்ளது. நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தால் பாஜகவிற்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. புதிய கட்சிகள் வரலாம், ஆனால் பாஜக வளர்ச்சியை அது பாதிக்காது. பாரதிய ஜனதா கட்சி அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. விஜய் கட்சி ஆரம்பிக்கட்டும் கொள்கை என்ன என்பது மக்களுக்கு தெரியட்டும். நடைமுறை என்ன என்பதை தெரியட்டும். அதை பார்த்து தான் கட்சியை மக்கள் என்ன என்பதை முடிவு செய்வார்கள்
பாரதிய ஜனதா ஒரு தெளிவான கொள்கையோடு உள்ளது. இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மிஞ்சி பாஜக வளர்ந்து வருகிறது. விஜய் கட்சி என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கு கொள்கைகள் என்னென்பதும் எந்த விதத்தில் முன்னெடுத்துச் செல்கிறார்கள் என்பது பின்னர் தான் தெரிய வரும். ஒரு கட்சிக்கு பெயர் வைத்தவுடன் ஒரு கட்சியை பற்றி சொல்ல முடியாது” என்றார்.