பாஜக கூட்டணிக்கு பாமக, தேமுதிக வர வேண்டும்- தமிழருவி மணியன்

 
Tamilaruvi Manian

பாரத ரத்னா கர்மவீரர் காமராஜரின் வெற்றிகளைத் தொகுக்கும் நூல் வெளியீட்டு விழா மதுரையில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாஜகவிலிருந்து மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

Image

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழருவி மணியன், “நாட்டு நலனில் நாட்டம் உள்ளவர்களாக இருப்பதால் தான் நாங்கள் அடுத்த முறையும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என்கிறோம். பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். நாட்டு நலனில் அக்கறை கொண்டு பாஜக கூட்டணிக்கு பாமக வர வேண்டும், தேமுதிகவும் வரவேண்டும். தேசிய அளவில் 400-க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக தனிப்பட்ட முறையில் பெற வேண்டும். ஒற்றாஇ மனிதராக நின்று உலகளவில் ஆளுமையாக உயர்ந்திருக்கும் நரேந்திர மோடி, மீண்டும் பிரதமராக வேண்டும்.

Image

பாஜகவின் கூட்டணியை வலுப்படுத்த விரும்புகிறேன். திமுக ஆட்சிக்கு எதிராக அண்ணாமலை களம் கண்டிருக்கிறார். போர் குணத்தோடு திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று களம் கண்டிருக்கிற அவரின் கரங்களை தமிழகத்தில் நல்லதை நாடும் வாக்காளர்கள் வலுப்படுத்த வேண்டும். நாட்டை விட்டு திராவிடத்தை விரட்ட போர் குணம் படைத்த அண்ணாமலை கரங்களை வலுப்படுத்துவோம். தமிழகத்தை பொறுத்த வரை 2026-ல் அண்ணாமலை தான் நினைத்ததை சாதிப்பார் என்று நம்புகிறேன் அவரது கரத்தை வலுப்படுத்த காமராஜர் மக்கள் கட்சி அவருக்கு துணை நிற்கும். போர்க் குணத்தோடு திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று களம் கண்டிருக்கும் தலைவர் அண்ணாமலையின் கரங்களை நல்லதை நாடுகிற வாக்காளர்கள் வலுப்படுத்த வேண்டும்” என்றார்.