ஒப்புதல் படிவங்களுடன் டெல்லி பறந்தார் தமிழ்மகன் உசேன்

 
t

 அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்திருக்கும் கடிதங்களை தலைமை தேர்தல் ஆணையத்திலும் ஒப்படைக்க அதிமுக அவை தலைவர் தமிழ் மகன் உசேன் டெல்லி புறப்பட்டார்.   அவருடன் சிவி சண்முகம் எம்பி உள்ளிட்டோரும் டெல்லி புறப்பட்டுச் சென்று இருக்கிறார்கள்.

e

 அதிமுகவில் பழனிச்சாமியின் -பன்னீர் செல்வமும் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றார்கள்.  இந்த மோதலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வந்துவிட்டது.  இதனால் இருதரப்பிலும் தனித்தனியாக வேட்பாளர்கள் அறிவித்துள்ளார்கள்.  தென்னரசு போட்டியிடுவதாக பழனிச்சாமி அறிவித்திருக்கிறார் .  செந்தில் முருகன் போட்டியிடுவதாக பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார் . இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.

e

 இதை முன்னிட்டு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும்.   இது குறித்து பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கும் ஒப்புதல் கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் அவை தலைவர் தமிழ்மகன் உசேன் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

 உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் விண்ணப்ப படிவம் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் நடந்தன. அதன்படி அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கட்சி தலைமை சார்பில் ஆன்லைன் மூலமாகவும் நேரிலும் விண்ணப்ப படிவம் அனுப்பப்பட்டு வந்தன.  அந்த விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு முறைப்படி நேற்று இரவு 7 மணிக்கு ஒப்படைக்குமாறு அவை தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவுறுத்தி இருந்தார்.

c

 அந்த கடிதத்தில் பொதுக்குழு உறுப்பினரின் புகைப்படம்,  நோட்டரி பப்ளிக் சான்றுடன் இணைத்து அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரிக்கிறேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பொதுக்குழுவுக்கு அதிகாரம் வழங்கியும் அவை அவை தலைவருக்கு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நான் வரவேற்கிறேன். இந்த அபிடவிட்டை என் சொந்த விருப்பத்தின் பேரில் தாக்கல் செய்கிறேன். இதனை அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் எந்த செயல்பாடுகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

 85 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் அதிமுக அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.   இந்த நிலையில் பொதுக்குழு உறுப்பினர்கள் சமர்ப்பித்த கடிதங்களை எடுத்துக்கொண்டு அவை தலைவர் தமிழ் மகன் உசேன்,  அவற்றை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் சிவி சண்முகம் எம்பி உள்ளிட்டோரும் சென்றிருக்கிறார்கள்.