தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் - என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

 
annamalai stalin

சித்திரைத் திங்கள் முதல் நாளே இதுவரை தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இடையில் 2008 ஆம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்த போது , தை திங்கள் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியின்போது,  அது மீண்டும் மாற்றப்பட்டது.

tamil new year bag

இந்நிலையில், தற்போது மீண்டும் திமுக ஆட்சியை பிடித்திருப்பதால் தமிழ் புத்தாண்டு மாற்றப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. . பொங்கல் பண்டிகையின்போது நியாய விலைக் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொடுக்கவுள்ள 20 இலவச பொருட்கள் கொண்ட துணிப் பையில், ‘இனிய தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்’ என அச்சிடப்பட்டிருக்கும் போட்டோ வெளியாகி உள்ளது.

annamalai

இதன் மூல ம் தமிழ் புத்தாண்டு மீண்உம் மாற்றப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது “ தமிழ்நாடு நாள் என மக்களை குழப்பிய திமுக, தற்போது தமிழ் புத்தாண்டையும் மாற்றி மக்களை புண்படுத்துகிறது, ஆன்மீக நம்பிக்கையில் மூக்கை நுழைத்து பக்தர்களின் நம்பிக்கையை சிதைப்பதில் திமுக தீவிரமாக உள்ளது.  நல்ல தீர்ப்பை மக்கள் எழுதும் காலம் வெகு தொலைவில் இல்லை; தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றும் சதித் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.