நெருங்கும் தேர்தல்... உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சிக்கு தாவிய பா.ஜ.க. அமைச்சர்

 
சுவாமி பிரசாத் மவுரியா, அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேசத்தில் பா.ஜக. அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்.

உத்தர பிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா நேற்று யார் எதிர்பாராத வண்ணம் மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்.

உத்தரபிரதேசத்தில் திருமணத்திற்கு தடை; அதிர்ச்சி கிளப்பும் யோகி

இது தொடர்பாக சுவாமி பிரசாத் மவுரியா டிவிட்டரில், யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் முரண்பட்ட சித்தாந்தம் மற்றும் சூழ்நிலைகள் இருந்தாலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினேன். தலித்துக்கள், ஓ.பி.சி.க்கள், விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் சிறு, நடுத்தர வணிகர்கள் மீதான புறக்கணிப்பு  அணுகுமுறை காரணமாக உத்தர பிரதேசத்தின் யோகி அமைச்சரவையில் இருந்து நான் ராஜினாமா செய்கிறேன் என்று பதிவு செய்து இருந்தார். மேலும் அதில் தனது ராஜினாமா கடிதத்தையும் பதிவேற்றம் செய்து இருந்தார்.

அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ் டிவிட்டரில், சமூக நீதி மற்றும் சமத்துவத்துக்காகப் போராடிய மக்கள் தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா ஜி  மற்றும் அவருடன் சமாஜ்வாடிக்கு வந்த அனைத்து தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோருக்கு அன்பான வரவேற்பு மற்றும் வாழ்த்துக்கள்! சமூக நீதியின் புரட்சி ஏற்படும்-22ல் மாற்றம் ஏற்படும் என்று பதிவு செய்து இருந்தார். அதனுடன் சுவாமி பிரசாத் மவுரியாவுடன் தான் நிற்கும் புகைப்படத்தையும் ஷேர் செய்து இருந்தார்.