அண்ணாமலை இருந்தால் பாஜகவுக்கு ஒரு ஓட்டு கூட விழாது- எஸ்.வி.சேகர்

 
sv

அண்ணாமலை பின்னாடி நோட்டீஸ் கொடுத்து ஓட வேண்டிய அவசியம் எனக்கில்லை என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

Actor SV Sekar said that there is no need for him to give notice and run behind Annamalai

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் எஸ்.வி.சேகர், “அண்ணாமலை பத்து வருடமாக போலீசாக இருந்ததாக கூறுகிறார். வாட்ச்மேன் கூடதான் கையில் வைத்திருப்பார். துப்பாக்கி வைத்திருந்தாலும்,  10 வருடத்தில் ஒரு முறையாவது டிரிகர் அழுத்தி இருப்பாரா அண்ணாமலை. இருந்தால் ஒரு ஓட்டு கூட விழாது. அண்ணாமலைக்கு எனது பையன் வயது கூட கிடையாது. எனவே அவர் பின்னாடி நோட்டீஸ் கொடுத்து ஓட வேண்டிய அவசியம் எனக்கில்லை. இரு பையன் தேர்வு எழுதுவதற்கு முன்பு நான் 100க்கு 100 வாங்கிவிடுவேன் என கூறுவான். கடைசியில் தேர்வு முடிவை பார்த்தால்தான் தெரியும், அந்ந்த பையன் இரண்டரை மார்க் மட்டுமே வாங்கிருப்பார். அண்ணாமலை கதையும் இப்படிதான். தேர்தல் முடிவுக்கு பின்னரே தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்ததா வளரவில்லையா என்பது தெரியவரும்.


அதிமுக- பாஜக கூட்டணியில் பிரச்சனை ஏற்பட்டால் பாஜக தலைவராக அண்ணாமலை இருக்கமாட்டார். அண்ணாமலையின் வாய்ச்சவடால் பாஜகவுக்கு தான் பின்னடைவை தரும். அண்ணாமலை தனெக்கென ஒரு மறைமுக அஜெண்டாவை வைத்துள்ளார். அதன்படியே செயல்படுகிறார். அண்ணாமலை இப்போது செய்துகொண்டிருக்கும் செயல்கள் அனைத்துமே சுயநலத்துக்காகதான். தனது பெயரையும், புகழையும் வளர்த்துக்கொள்வதற்காகவெ இப்படி செய்துகொண்டிருக்கிறார்” என்றார்.