விரைவில் பிராமணர்களுக்கான கட்சி தொடக்கம்- எஸ்.வி.சேகர்

 
“குலைநடுங்கும் நிலநடுக்கத்தால் 9 பால் பாக்கெட்டுகளும் சிதறிக் கதறுகிறது” : எஸ்.வி. சேகரை கலாய்க்கும்  தயாநிதி மாறன்

நேத்து பெய்த மழையில் இன்னைக்கு முளைத்த காளான் அண்ணாமலை என எஸ்.வி சேகர் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.வி.சேகர், “மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர்கள் பொது வாழ்க்கைக்கு வரவேண்டும். அந்த வகையில் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அரசியல் என்பது சமூக சேவை செய்வதற்கு அங்கீகாரம் உள்ள பதவியே தவிர. சம்பாதிக்கக்கூடிய இடமில்லை. விஜய்க்கு அரசியல் வரவேண்டுமென்ற ஆசை இருந்தால் வரட்டும். விஜயின் ரசிகர்கள் மன்றம் சிறப்பாக செயல்படுகிறது. அவர் அரசியலில் வந்தால் ரசிகர்கள் மன்றத்தினர் அனைவரும் கட்சியினராக மாறுவர். 

காமராஜர், கக்கனுக்கு பிறகு நேர்மையான அரசியல்வாதி எவரும் இல்லை. ஓட்டுக்கு மக்கள் பணம் வாங்குவதும் ஊழல். ஆகவே மக்கள் ஊழலை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஒரு ஐடி ரெய்டு வரவேண்டுமென்றால் கிட்டத்தட்ட 6 மாதங்கள் சம்பந்தப்பட்டவரின் கணக்கு மற்றும் ஆதாரங்களின் விவரங்களை சேகரிப்பர். அண்ணாமலை பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டார் நல்ல மாற்றம் வரும். ஜெயலலிதா குறித்து அண்ணாமலை தவறாக விமர்சித்துள்ளார். காரணம் அண்ணாமலைக்கு அரசியலே தெரியாது. கட்சி அலுவலகத்தை காவல்நிலையமாக வைத்துள்ளார். முன்பு பாஜகவில் நேர்மையான, ஒழுக்கமான நபர்கள் இருந்தனர். இப்போது குண்டர்கள், சந்தன மரம் கடத்தல்காரர்கள், குற்றவாளிகளே பாஜகவில் உறுப்பினர்களாக உள்ளனர். நேத்து பெய்த மழையில் இன்னைக்கு முளைத்த காளான் என்பது அண்ணாமலைக்கு பொறுத்தும். பாஜகவில் இருந்து பிராமணர்களை ஒழித்துக்கட்டுவேன் என அண்ணாமலை தீர்மானம் எடுத்துள்ளார். அவர் சார்ந்த சமூகத்தை தவிர வேறு யாரும் பாஜகவில் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் அண்ணாமலை நடந்துகொள்கிறார். அதனுடைய பலன் 2024-ல் தெரியும். ஆனால் அப்போது அண்ணாமலை தமிழக பாஜகவில் இருப்பாரா? என்பது தெரியாது. 

தமிழ்நாட்டில் விரைவில் பிராமணர்களுக்கான கட்சி தொடங்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் பிராமணர்களுக்காக தொடங்கப்படும் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்துவிட்டது. வரும் 2024 தேர்தலில், தமிழ்நாடு, புதுச்சேரி சேர்த்து 40க்கு 33 தொகுதிகளில் பிராமண வேட்பாளர்கள் அக்கட்சியின் சார்பில் போட்டியிட போகிறார்கள். பிராமண வேட்பாளர்களுக்கு பிராமணர்கள் மட்டும் ஓட்டுப்போட்டால் போதும். தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட உள்ள பிராமணர்களுக்கான கட்சிக்கு நான் தலைமை ஏற்க வேண்டும் என அவர்கள் ஆசைப்பட்டால், மோடிஜீ இடம் சொல்லிவிட்டு பாஜகவில் இருந்து விடைபெற்று வருவேன். அண்டை மாநிலங்களில் எல்லாம் பிராமணர்களுக்கு என ஒரு நல வாரியம் செயல்படுகிறது” என்றார்.