சூர்யாவை வைத்து கூத்தடித்துள்ளார்கள்.. மூன்றாம் பிறை ஶ்ரீதேவியின் நிலைதான்.. விளாசும் எச்.ராஜா

 
ச்

நடிகர்  சூர்யாவை வைத்து கூத்தடித்துச் சென்றுள்ளார்கள்.  மூன்றாம் பிறை ஸ்ரீதேவியின் நிலை தான் ஞாபகத்துக்கு வருகிறது என்று விளாசி எடுத்திருக்கிறார் எச். ராஜா.

சு

 பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.  ராஜா சிவகங்கை செய்தியாளர்களை சந்தித்தார் .  அப்போது,  கீழடியில் நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா, நடிகர் சிவக்குமார் உள்ளிட்டோர் சென்று பார்வையிட்டது  குறித்த கேள்விக்கு,  கீழடியில் சினிமா நடிகர் சூர்யா வந்த அன்றைக்கு அகழாய்வு  கூடத்தை பூட்டி வைத்துக் கொண்டு கூத்தடித்துச் சென்றிருக்கிறார்கள்.  இது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா? என்று ஆத்திரப்பட்டார்.

எதிர்க்கட்சிகளின் சமூக நீதி பிரச்சாரம் குறித்த கேள்விக்கு,   எதிர்க்கட்சிகள் சில நாட்களுக்கு முன்பாக சமூக நீதி மாநாடு ஒன்றை நடத்தி இருக்கிறார்கள்.  உண்மையில் பாஜக தான் சமூக நீதி என்பதை நிறைவேற்றி வருகிறது.  வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல் கலாம் ஜனாதிபதி ஆக்கப்பட்டார்.  அதே போன்றுதான் பிரதமர் மோடி ஆட்சியிலும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்தம்,  அதை எடுத்து முதன்முறையாக மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த பெண்மணியும் ஜனாதிபதியாக ஆகி இருக்கிறார்கள்.

ஹ்

 அம்பேத்கரின் நினைவிடங்கள் உலகம் முழுவதும் அமைக்கப்பட்டிருக்கின்றன.  இந்த நேரத்தில் எதிர்க்கட்சிகள் எல்லாம் சமூகநீதி கூட்டமைப்பை ஏற்படுத்தியிருப்பது மூன்றாம் பிறை ஸ்ரீதேவியின் நிலை தான் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது என்று கமெண்ட் அடித்தார். 

சிவகங்கை தொகுதியான தற்போதைய எம்பி யார் என்று முழு நேர அரசியல்வாதியான எனக்கே மறந்து போய்விட்டது . இதேபோல் தான் மக்களின் மனநிலையும் இருக்கிறது.  இதைவிட அந்த எம்பிக்கே தன்னோட தொகுதி எது என்று மறந்து போய்விட்டது என்று கார்த்தி சிதம்பரம் எம்பியை கடுமையாக விமர்சித்தார்.