அண்ணாமலையை சமாதானப்படுத்திய ஆதரவாளர்கள்

 
va

 தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை அறிவித்ததும் அவரது ஆதரவாளர்கள் சமாதானப்படுத்தி இருக்கிறார்கள். 

நேற்று நடந்த பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, பாஜகவை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் ஐபிஎஸ் பொறுப்பை விட்டு விட்டு தமிழக அரசியலில் காலடி எடுத்து வைத்தேன்.  சமரசங்களை செய்துதான் அரசியல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.  கூட்டணியில் சமரசங்களை செய்ய சொல்கின்றார்கள்.  சமரசம் செய்து கூட்டணியை ஏற்படுத்தி அதன் வழியில் செல்ல வேண்டும் என்றால் அதற்கு அண்ணாமலை தேவையில்லை.  அப்படி ஒரு சமரசமும் தேவையில்லை .

am

அண்ணாமலைக்கு தலைவர் பொறுப்பு அவசியம் இல்லை.  கூட்டணிக்காக சமரசங்கள் செய்து கட்சியை கட்டமைத்து செல்ல இங்கே நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கட்சியை வழிநடத்தலாம்.  அப்படி கூட்டணி அமைந்தால் நான் தொண்டனாக இருப்பேன்.  அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைப்பது என்றால் நான் நிச்சயம் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதற்கு அண்ணாமலையின் ஆதரவாளர்கள்,  தமிழக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி,  தமிழக பாஜக விளையாட்டுத்துறை  தலைவர் அமர் பிரசாத் ரெட்டியும் பேசும்போது,  வழக்கமாக அண்ணாமலை இப்படி பேச மாட்டார். என்ன நடந்துவிட்டது என்று இப்படி விரத்தியுடன் பேசுகிறீர்கள்.  குள்ள நரிகள் ஓலமிடுவதற்காக சிங்கங்கள் பதுங்க கூடாது.

na

 கர்நாடக தேர்தலுக்கு இணை பொறுப்பாளராக நீங்கள் நியமிக்கப்பட்ட போது உங்களை ஓரங்கட்ட போகிறார்கள் என்று சிலர் கூறினார்கள்.  அதற்கு வலு சேர்ப்பது போல் நீங்களே பேசுவது குழப்பமாக இருக்கிறது.   நீங்கள் தலைவர் இல்லை.  விரும்பும் அடையாளம்.  அதனால் முடிவு எதுவானாலும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் .  உங்களை விடுவித்து விட்டு கூட்டணி என்றால் அந்த சமரசம் பாஜகவுக்கும் தொண்டனுக்கும் தேவையே இல்லை என்று கூறினர்.

 இதற்கு நன்றி தெரிவித்து விட்டு மீண்டும் பேசிய அண்ணாமலை,   அண்ணாமலை ஒருநாளும்  தன் நிலையில் இருந்து தாழ்ந்து போக மாட்டான்.  கூட்டணி வேண்டும் என்றால் அங்கே அண்ணாமலைக்கு இடமில்லை . வருமுன் எதிர்கொள்ள தயார் எல்லோரும் தயாராக இருப்போம் . ஆனால் இப்போதைக்கு எதுவும் நடந்து விடவில்லை .மே பத்தாம் தேதிக்கு பின்னர் என்ன சூழல் என்பதை பார்த்துவிட்டு அதற்கு ஏற்ப நம்முடைய செயல்பாடுகளை கட்டமைத்துக் கொள்வோம் என்றார்.