காங்கிரஸால் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது.. பகுஜன் சமாஜ் கட்சி குற்றச்சாட்டு

 
காங்கிரஸ்

நான் ஒரு பெண், என்னால் போராட முடியும் போன்ற முழக்கங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சியால் கொடுக்க முடியும். ஆனால் பெண்களுக்கு பாதுகாப்பை வழங்க முடியாது என்று பகுஜன் சமாஜ் குற்றம் சாட்டியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் அண்மையில் மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு சாலை  ஒரத்தில் வீசப்பட்டார். இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆல்வார் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஆளும் கட்சியான காங்கிரசுக்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

வெங்கையா நாயுடு சொன்னதை மோடி அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும்.. பகுஜன் சமாஜ் கட்சி வலியுறுத்தல்..

இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுதீந்திர படோரியா கூறியதாவது: காங்கிரஸ் கட்சி பெண்களின் பாதுகாப்பை மட்டுமே பேசுகிறது. டெல்லியிலும், மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் நிர்பயா வழக்கு நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்ததில் இருந்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்த முன்னேற்றமும் நடக்கவில்லை.

பிரியங்கா காந்தியின் கருத்து முதர்ச்சியற்றது, குழந்தைத்தனமானது.. வெளுத்து வாங்கிய பகுஜன் சமாஜ் கட்சி

காங்கிரஸ் கட்சியால் நான் ஒரு பெண், என்னால் போராட முடியும் போன்ற முழக்கங்களை மட்டுமே கொடுக்க முடியும். ஆனால் பெண்களுக்கு பாதுகாப்பை வழங்க முடியாது. மாநிலத்தில் பெண்கள் இன்னும் ஒடுக்கப்பட்டு, அவர்கள் மீது வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.