மத வெறியை உருவாக்கி மக்களிடையே மோதலை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சி செய்கிறது... சுதீந்திர படோரியா

 
பா.ஜ.க.

மத வெறியை உருவாக்கி மக்களிடையே மோதலை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சி செய்கிறது என்று சுதீந்திர படோரியா குற்றம் சாட்டினார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுதீந்திர படோரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது: பா.ஜ.க. அல்லது சமாஜ்வாடி அல்லது வேறு எந்த கட்சியாக இருந்தாலும் இந்த தேர்தல்களை  பிரிப்பதையே அவர்கள் நோக்கமாக கொண்டுள்ளனர். மாயாவதி ஜி 2012ல் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அப்போது மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தது. மாநிலத்தில் தற்போதைய பா.ஜ.க. அரசால் சமீபத்தில் தொடங்கப்பட்ட  யமுனா எக்ஸ்பிரஸ்வே அல்லது லக்னோ மெட்ரோ அல்லது கங்கா எக்ஸ்பிரஸ்வே மற்றும் ஜேவார் சர்வதேச விமான நிலையம் கூட மாயாவதி ஜியால் கருத்துருவாக்கம் செய்யப்பட்டு முன்மொழியப்பட்ட திட்டங்களாகும்.

சுதீந்திர பதோரியா

இப்போது அவர்கள் அனைவரும் ரிப்பன் வெட்டுவதில் ஈடுபட்டுள்ளனர். பாராட்டுக்களை கொள்ளையடிப்பதில் மும்முரமாக உள்ளனர். உத்தர பிரதேச மக்கள் வளர்ச்சி மற்றும் சட்டம் ஒழுங்கில் மாயாவதி ஜியை நம்பர் ஒன் என்று கருதுகிறார்கள். யோகி ஜி எவ்வளவு பயனுள்ளதாக இருந்தார் என்பது கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில்தான் தெரிந்தது. மாநில சுகாதார சேவைகளில் குறைபாடுகள் காணப்படுகின்றன. இதனால் இவ்வளவு பெரிய அளவில் மக்கள் உயிரிழப்பதால் யோகி ஜி மீது மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

புலம்பெயர்ந்தோரின் அவல நிலைக்கு காங்கிரசும், பா.ஜ.க.வுக்கும் சம பொறுப்பு உள்ளது…. மாயாவதி குற்றச்சாட்டு..

மத வெறியை உருவாக்கி மக்களிடையே மோதலை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சி செய்கிறது. உத்தர பிரதேச மக்களும் இதை அறிவார்கள். பா.ஜ.க.விலும் மற்ற கட்சிகளிலும் கறுகிய மனப்பான்மை கொண்ட மதவாத சக்திகள் உள்ளன. சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் அரசியல் சாசனத்தில் பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கரின் கருத்துருவில் உருவான முற்போக்கான நடவடிக்கையை இவர்கள் அனைவரும் விரும்பமாட்டார்கள்.  இந்த சக்திகள் மத மோதல்,ஒரு குறுகிய மனநிலையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. 5வது முறையாக உத்தர பிரதேச முதல்வராக  மாயாவதி  தேர்ந்தெடுக்கப்படுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.